பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அறிவுடையார் வெல்லுதற்குரிய காலததை கோக்கியிருந்து, உள்ளே சினங் கொண்டிருப்பர்

பகைவரைக் கானும் போது பணிந்து செல்க! அவர்கள் அழிதற்குரிய காலம் வந்துற்ற போது, அவர்தம் தலை இற்றுக் கீழே விழும்.

கிடைக்கக் கூடாத ஒரு காலம் கிடைக்குமானால், அப்பொழுதே எளிதில் செய்ய இயலாத செயலைச் செய்து கொள்க.

காலம் நோக்கி இருக்கும் காலத்தில் கொக்கு போன்று ஒடுங்கி உரிய காலத்தில் அக்கொக்குக் குத்துமாறு விரைந்து பகையைக் களைக.

—திருவள்ளுவர்

காலத்தில் தான் குறை உள்ளது, எல்லா மனிதர்களுமே கல்ல பிறவிகளாகத் தான் ஆகின்றனர்; ஆனால், அதற்குக் காலம் அதிகம் பிடிக்கிறது.