பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவியல் நோக்கில்
காலமும் கடிகாரமும்

காலம்

தொடர்ந்து ஒழுங்காக நிகழும் இயற்கை நிகழ்ச்சியைக் கொண்டு காலம் அளவிடப் படுகிறது. எடுத்துக்காட்டாக, உலகம் தன்னைத் தானே ஒரு முறை சுற்றும் காலத்தை ஒரு நாள் என்றும், நிலம் சூரியனை ஒரு முறை சுற்றிவரும் காலத்தை ஒர் ஆண்டு என்றும் குறிப்பிடுகிறோம். ஏதாவதொரு விண்மீனை (நட்சத்திரத்தை)யும் உலகத்தின் சுழற்சியையும் வைத்துக் கொண்டும் காலத்தை அளக்கலாம்.

உலகம் ஒரு முறை சுழலும் நேரத்தில் நமக்கு அந்த பட்டு உலகை ஒரு முறை சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தை அடைவதாகத் தோன்றும். இந்த நேரத்தை (நட்சத்திர) நாள் என்று