பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. அறிவியல் ஆய்வகம்-அமைப்பு அமைப்பதற்குமுன் :-பள்ளிகளில் அ றி வி ய ல் ஆய்வகத்தை அமைக்கும்பொழுது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். இப்படித் தான் ஆய்வகம் அமைத்தல் வேண்டும் என்ற திட்டமான வரை யறையோ விதிகளோ இல்லை : அப்படிக் கட்டுப்படுத்துவதாலும் நிறைந்த பயனே எதிர்பார்க்க இயலாது. ஆய்வக அறைகளின் உட்புற அமைப்பை முதலில் அறுதியிட்டுக்கொண்டு சுவரின் அமைப்பை அடுத்துக் கவனித்தல் வேண்டும். ஆனால் பெரும்பாலும் கட்டடத்தைக் கட்டி முடித்துக்கொண்டு உட்புற அமைப்பில் பின்னர்க் கருத்தினச் செலுத்துவதாலும், கட்டடவேலை தொடங்குவதற்கு முன்னர் அநுபவம் மிக்க அறிவியல் ஆசிரியரைக் கலந்து ஆலோசிக்காததாலும், பள்ளி அறிவியல் ஆய்வகங்கள் பெரும்பாலும் மனநிறைவு கொள்ளத்தக்க முறையில் அமைவதில்லை. பட்டறிவு மிக்க ஆசிரியராக இருந்தாலும், பள்ளியில் ஆய்வகத்தை அமைப்பதற்கு முன்னர் அவர் பல்வேறு பள்ளிகளிலுள்ள ஆய்வகங்களைப் பார்த்துவருதல் வே ண் டு ம் : ஒவ்வொன்றிலுமுள்ள குறைகள், நிறைகளைக் கவனித்தல் வேண்டும். அறிவியல் முறைகளைக் கூறும் பல நூல்களைப் பயின்று அவற்றிலுள்ள கிடைப்படங்களை நன்கு ஆராயவேண்டும். இதன் பிறகுதான் பள்ளியில் அமைக்கவிருக்கும் ஆய்வகத்தைப்பற்றி நன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும். வேறு அறைகள் : ஆய்வகம்’ என்பது மாளுக்கர்கள் பல்வேறு சோதனைகளைச் செய்து கற்கும் ஒரு பெரிய அறையாகும். ஒரு பள்ளி யில் அறிவியல் பாடம் சரியான முறையில் நடைபெறவேண்டுமானல், இந்தப் பெரிய அறையைத் தவிர இத்துடன் தொடர்புள்ள ஒரு சில, வேறு அறைகளும் இன்றியமையாதவை. ஆயத்த அறை, இருட்டறை, சேகர அறை, அறிவியல் ஆசிரியர்கள் அறை, சில்லறைச் சாமான்கள் வைக்கும் அறை ஆகியவை அறிவியல் ஆய்வகத்தின் இன்றியமையாத உறுப்புகளாகும். உத்தேச அமைப்பு : அடியிற் குறிப்பிட்ட திட்டத்திலுள்ளவாறு அறைகளே அமைத்துக் கொள்ளலாம் :