பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆய்வகம்-அமைப்பு 89. யும் எடுத்து வைப்பதற்கு இவ்வறை பெரிதும் பயன்படும். அடிக்கடி பயன்படாத துனேக்கருவிகள், நிறைவுபெருத சோதனைகளின் அமைப்பு முதலியவற்றை இங்கு வைத்துக்கொள்ளலாம். பயிற்றும் அறையில் வேறு பாடங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது அவர்களுக்குத் தொந்தரவு இன்றி அறிவியல் ஆசிரியர் ஒய்வு நேரத்தில் அடுத்த பாடவேளேக்கு வேண்டிய சோதனைகளே ஆயத்தம் செய்யலாம். மற்றும் இந்த அறையில் தொழிற்சாலேத் தளவாட சாமான்கள், கண்ணுடிக் குழல்கள், கண்ணுடிக்கோல்கள், ஆணிகள், திருகுகள், மெல்லிய கம்பிகள், தக்கைகள், தக்கைத் துாேப்பான், காற்றடிக்கும் துருத்தி, சாமனங்கள், பீங்கான் உரல்-உலக்கை, அங்கவடிகள், குழாய். அடைப்பான்கள் போன்ற அவ்வப்பொழுது தேவைப்படும் சாமான்களே வைத்துக்கொள்ளலாம். இதன் அளவு 250 சதுர அடிக்குக் குறைவாக இருத்தல் கூடாது. இந்த அறையிலிருந்து சேகர, அறைக்கும், ஆய்வகத்திற்கும், அறிவியல் ஆசிரியர்கள் அறைக்கும் போவதற். கேற்ற வாயில்கள் அமைக்கப்பெறுதல் வேண்டும். - சேகர அறை : இந்த அறையில் எல்லாப் பொருள்களும் வைத்துப் பூட்டப்பெற்றிருக்கும். தேவைப்படுங்கால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அபாய மான அமிலங்கள், காரங்கள், பிற வேதியியல் பொருள்கள் முதலியவை இங்கு வைக்கப்பெறும். இந்த அறை 200 சதுர அடிக்குக் குறைவாக இருத்தல் ஆகாது. அப்படியிருந்தால்தான் அலமாரிகள், பரண்கள் (Racks), அலமாரிகள் (Shelves) முதலியவை அமைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். சாதாரணமாக இந்த அறை 16 x 12 அளவில் அமையலாம். - இருட்டறை - கிரந்தமாக இருட்டு இருக்குமாறு இவ்வறை அமைக்கப்பெறும் ; ஆனால் காற்ருேட்ட வசதிக்குக் குறைவு இருக்கக் கூடாது. இவ்வறையில் கழிநீர்த் தொட்டிகள், இருட்டறை விளக்கு முதலிய வசதிகள் அமைக்கப்பெற்றிருக்கும். ஒளிப்படக் கலக்கு வேண்டிய பீங்கான் கிண்ணங்கள், சாமணங்கள், வெப்பகிலேமாணிகள், வண்ணம் கலக்கும் கண்ணுடிக்கோல்கள் முதலிய பொருள்கள் இருக்கும்: படத்தைப் பெரிதாக்கும் கருவி (Enlarger) மிகவும் பயன்படக்கூடிய தொன்று. ஒளிப்படத்திற்கு வேண்டிய வேதியியல் பொருள்கள் எளிதில் கிட்டுமாறு இருக்கும். ஒளிச்சேர்க்கைபற்றிய சோதனைகள், ஒளி அளவைபற்றிய சோதனைகள் செய்ய இவ்வறை நன்கு பயன் படும். அறிவியல் கழகத்தினரால் மேற்கொள்ளப்பெறும் ஒளிப்படக் கலைபற்றிய செயல்களும் இவ்வறையில் மேற்கொள்ளப்பெறும், இந்த அறை, 8 அடி நீளத்திற்குக் குறைவாக இருத்தல் கூடாது : அப்படியிருந்தால்தான் இருவர் கழிநீர்த் தொட்டியின் அருகிலிருந்து கொண்டு வேலே செய்ய முடியும். சாதாரணமாக இந்த அறை 9 x 6" அளவில் இருக்கலாம்.