பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அறிவியல் பயிற்றும் முறை (இ) இருக்கை வசதிகளை விருப்பப்படி மாற்றியமைக்கும் ஏற்பாடுகள் : (ஈ) தேவையான துணைக்கருவிகள். பல்வேறு தேவைகளுக்காக இந்த ஆய்வகங்களைப் பயன்படுத்து வதால், முன் கூட்டியே பல்வேறு தேவைகள் யாவை என்பதை ஒரளவு அறுதியிட்டுக்கொண்டே ஆய்வகங்களை நிறுவுதல் வேண்டும். எனவே, அறைக்குள் அமைக்கும் எல்லாவிதப் பொருத்தங்களை (Fittings) மிகவும் கன்ருகச் சிந்தித்த பிறகே அமைக்க வேண்டும். அவை எவ்வித வேலேகளுக்கும் இடையூறுகளாக அமைதல் கூடாது. இடப்பரப்பு அதிகமாக இருந்தால் எல்லா வசதிகளையும் செய்து கொள்ளலாம். எனவே, அறிவியல் ஆசிரியர் முதலில் அதிக இடப் பரப்பை வற்புறுத்துதல் வேண்டும். ஒன்றற்கு மேற்பட்ட பாடப் பகுதிகளேக் கற்பிக்கும் ஆய்வகத்தில் எதிர்பாராத தேவைகளுக்கென இடம் ஒதுக்கப்பெற்றிருக்கும். ஆய்வகத்தில் பெளதிகப் பகுதிபற்றிய சோதனைகள் நடைபெறுங்கால் ஒதுக்கி வைத்துள்ள பெஞ்சு இடத்தை அடுத்த பாடவேளையில் நடைபெறவிருக்கும் உயிரியலுக்குரிய பொருள் களே வைத்துக்கொள்ளப் பயன்படுத்தலாம். ஒரே பாடவேளையில் முடிவுருத சோதனைகளுக்குரிய பொருள்களையும் அவ்வவ்விடங்களி லேயே வைத்துக்கொள்ளலாம். - - சில குறிப்புகள் : இரண்டு கோக்கங்களுக்கான ஆய்வகத்தை அமைக்கும்பொழுது அடியிற்கானும் குறிப்புகளையும் கவனித்தல் வேண்டும். (1) செய்து காட்டல் ஏற்பாட்டிற்கான வசதிகளும் தேவை : பயிற்றும் அறை என்று ஒன்றில்லாத பள்ளிகளில் ஆய்வகத்திலேயே செய்து காட்டலுக்கேற்ற மேசையையும் அமைத்துக்கொள்ளலாம். அந்த மேசையில் அமைக்கும் பொருத்தங்கள் (Fittings) மிக விரிவான நிலையில் இருக்கவேண்டியதில்லை : மின்னுற்றல், எரிவாயு, தண்ணிர் முதலியவை பெறும்படியாகவும், ஒரு கழிநீர்த் தொட்டியும், முடிந்தால் ஒரு கச்சு ஆவிப்போக்கியும் இருக்கும்படியாகவும் அமைக்க வேண்டும். (2) சுவரிலேயே பொருத்தி வைத்துள்ள ஒன்றிரண்டு பெஞ்சு கள் இருந்தால் நன்று. அந்த அறையில் அகற்றக்கூடிய அதே அளவு உயரமுள்ள மேசைகளும் இருக்க வேண்டும். தேவைப்படுங்கால் மேசைகளை ஒன்றுசேர்த்தோ, அல்லது பெஞ்சுகளுடன் மேசைகளையும் சேர்த்தோ விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். கீலுள்ள பலகை யொன்ருல் இரண்டு ஓரங்களையும் எளிதில் இணேத்துக் கொள்ளலாம். இந்த ஏற்பாடு பெளதிக இயல் உயிரியல் பகுதிகளுக்கு மட்டிலும் பயன்படுமேயன்றி வேதியியல் சோதனைகளைச் செய்து காட்டப் பயன்படாது. . -