பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 அறிவியல் பயிற்றும் முறை: வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி காடு முற்றிலும் உள்ளன ஆர்கள் ககர்களெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாததோ ரூரைத் தீயினுக் கிரை யாக மடுத்தல் என்ற பாரதியாரின் கல்வித் திட்டம் இன்று செயற்படத் தொடங்கி. யுள்ளது என்று கருதலாம். நம் நாட்டுப் பொருளாதார நிலையினை யொட்டியும், மின்னுற்றல் முதலிய பல்வேறு வசதிகள் சிற்றுரர்களில் கிடைப்பது அருமை கருதியும் சிற்றுார்ப் பள்ளிகளுக்கும் ஏற்றவாறு ஒர் ஆய்வகத்தை நிறுவுவதில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றி யமையாதது. டாக்டர் வொயிட்ஹவுஸ் என்பார் கூறும் ஆய்வகமும் பயிற்றும் அறையும் இணைந்ததோர் அமைப்பு இப்பள்ளிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர் கூறும் அமைப்பை ஈண்டுக் சிறிது கவனிப்போம் : - - கட்டட அமைப்பு: அவர் கூறும் 45 x 25 அளவுள்ள அறை மிகவும் ஏற்றது. 25 அடிக்கு மேல் அறையின் அகலமிருந்தால் கூரையைத் தாங்கும் அமைப்பில் சங்கடங்கள் ஏற்படும். 25 அடிக்குக் குறைவான அகலம் கூடாது வசதியிருந்தால் 30 அடி அகலம் உள்ளதாக அமைக்கலாம். இந்த அறையில் ஒரு பாதியில் வகுப்பை உட்காரவைத்து, செய்துகாட்டல் முறையில் பாடங்களேக் கற்பிக்கலாம்: மற்ருெரு பாதியில் மாளுக்கர்கள் தாமாகச் சோதனைகளைச் செய்யும் மேசைகளை அமைக்கலாம். இதில் 20 பேர்களுக்குத்தான் வசதிகள் செய்ய முடியும் : இவர்கள் சோதனைகளைச் செய்துகொண்டிருக்கும் பொழுது மற்ருெரு இருபது பேர் ஏதாவது எழுத்து வேலைகள் செய்து கொண்டிருப்பர். முன்னர்க் குறிப்பிட்டபடி இம்மாதிரியாக இரண்டு அறைகள் அமைத்தால், பாடவேளேப் பட்டி அமைப்பதில் சிரமம் இன்றி எல்லா வகுப்புகளுக்கும் கல்ல முறையில் அறிவியல் கற்பித்தலை மேற்கொள்ளலாம். - அறையின் சுவர் 13 அடி கனம் இருந்தால் போதுமானது. சிமெண்டையோ காரையையோ கொண்டு செங்கல் கட்டடம் அமைத்தால் கெட்டியாக இருக்கும் தரையை வழுவழுப்பாக இருக்கும்படி அமைத்தல் நன்று. காங்கிரீட் தளம் மிகவும் ஏற்றது. இத்தளம் வழுவழுப்பாக இருப்பதுடன், எளிதில் துப்புரவு செய்ய வசதியாகவும் இருக்கும். ஒருபக்கம் சிறிது சரிவாக அமைத்துவிட்டால் அடிக்கடி தண்ணீர்விட்டுக் கழுவலாம் : மூலே முடுக்குகளில் தரகம் குப்பையும் அடையாது பார்த்துக்கொள்ளவும் செய்யலாம்: 1. பாரதியார்: கவிதைகள்-வெள்ளைத்தாமரை. .ே 2. ஒன்று வேதியியலுக்கும் பெளதிக இயலுக்கும் மற்ருென்று உயிரியலுக் கும் பெளதிக இயலுக்கும்.