பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . - ക്രിഷ് பயிற்றும் முறை --.۔-م۔۔-ب. ہمہ۔۔۔ எழுதுவதற்கும் வசதியாக இருக்கும் ; ஆசிரியர் செய்து காட்டும் சோதனைகளே மாளுக்கர் நன்கு கவனிக்கவும் இயலும். இந்த மேசைக்கும் ஆசிரியர் இருக்கைக்கும் மேடை தேவை இல்லே அப்படித் தேவையாக இருந்தால் 10 அங்குலம் உயரத்திற்கு சிமெண்ட் காங்கிரிட்டால் ஒரு மேடையை அமைத்துக்கெர்ள்ளலாம். மாளுக்கர்கள் உட்கார்ந்துகொண்டு கவனிக்கும் இடமும் அவர்கள் சோதனை செய்யும் இடமும் ஒரே தளத்தில்தான் இருக்கும் , தரையில் ஏற்றத்தாழ்வுகள் இராது. கல்லூரிகளில் இருப்பது போல் காலரியில்’ உட்காரும் வசதி இங்கில்லே. காலரி அமைப்பதால் செலவும் அதிகம் ; தொல்லைகளும் அதிகம். அது இருந்தால் தரையைத் துப்பரவு செய்வதும் சிரமம் : ஆசிரியர் மாணுக்கர்களே மேற்பார்த்தலும் எளிதன்று. உயர்நிலைப் பள்ளிகளில் மாளுக்கர்களே மேற்பார்த்து அவர்கள் எழுத்து வேலே முதலியவற்றை அடிக்கடி கவனிக்காவிட்டால் கற்பித்தல் நன்முறையில் நடைபெருதன்ருே ? இரண்டிரண்டு பேர் சேர்ந்து உட்காருமாறு பெஞ்சுகளேயும் மேசைகளையும் தனித் தனியாக அமைத்தால் நன்று. அவ்வாறின்றி இருக்கை வசதியுடன் கூடிய இரட்டைச்சாய்வு மேசைகளே அமைத்த லால் நன்மை விளையாது ; செலவும் அதிகம். இருபது மேசைகளும் சாய்மானம் உள்ள இருபது பெஞ்சுகளும் இருந்தால் ஒரு வகுப்பிற்குப் போதுமானது. இவ்வாறு தனித்தனியாக அமைப்பதால் பல நன்மை கள் உள செலவு குறையும். இயல்பான முறை பள்ளிக்கு வெளியிலும் இவ்வித அமைப்புதானே உள்ளது ? மானக்கர்கள் எளிதாக எழுந்து நிற்கவும், வெளியே போகவும் வசதியாக இருக்கும். அறையைத் துப்புரவு செய்யுங்கால் அவற்றை அகற்றுதல் எளிது. பள்ளி விழாக்களின்பொழுது வெளியாருக்கும் விருந்தினர்களுக்கும் கல்ல முறையில் இருக்கை வசதிகளேச் செய்துகொள்ளவும் உதவும். மேசை 3; அடி நீளம், 14 அடி, அகலம், 2 அடி உயரம் இருத்தல் வேண்டும். மேசையின் அடியில் மாணுக்கர்கள் நூல்கள், கையேடுகள் முதலியவை வைத்துக்கொள்வதற்கேற்றவாறு பலகைகளால் தடுப்பு செய்தல் வேண்டும். இந்த அமைப்பு மாணுக்கர் உட்காருங்கால் முழங்காலில் மோதாதிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேசையின் மேல்தளம் சமமாகவே இருக்கும் ; மைக்கூடுகள் வைப்பதற்கேற்ற வரைவுகள் இரா. பெஞ்சு 1; அடி உயரமும் 1 அடி அகலமும் இருக்கும். இவை யாவும் நல்ல தேக்கு மரத்தால் செய்யப் பெற்றவை. - ஒரு மேசையையும் பெஞ்சையும் 3}x3; அடி சதுரத்தில் அமைத்துவிடலாம். வரிசைக்கு நான்கு வீதம் 5 வரிசைகளில் இருக்கை வ ச தி க ளே அமைத்துக்கொள்ளலாம். 40 பேர். உட்காருவதற்கு 18x178 சதுர அடி இடப்பரப்பு போதுமானது.