பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆய்வகம்-துணைக்கருவிகள் - i{}} ‘பிராஸோ'வை எடுத்து பொருள்களின் மீது ஒரே மாதிரியாகத் தடவி, உலர்ந்த பிறகு மோட்டாத் துணியால் கன்கு துடைத்துவிட்டால் பொருள்கள் பளிச்சென்று தூய்மையாகும். (2) இரும்புப் பொருள்களே மெருகேற்றுவதற்கு ஜப்பான் கருப்பை'ப் பயன்படுத்தலாம். சிறிது மண்ணெண்ணெயைப் பூசிப் பொருள்களின் மீதுள்ள துருவை அகற்றுதல்வேண்டும். கற்பொடித் தாளேக்கொண்டு தேய்த்தும் துருவைப் போக்கலாம். பிறகு அவற்தை கன்கு துடைத்துவிட்டுச் சிறிதளவு கற்பூரத் தைலத்தில் கரைத்த *ஜப்பான் கருப்பை”த் தடவி உலரவைத்தல் வேண்டும். இரும்புப் பொருள்களிலுள்ள திருகாணிகளும் கீல்களும் துருப் பிடிக்காதிருக்கும் பொருட்டு மழைக்காலங்களில் வாசிலிக்னத் தடவி வைக்கவேண்டும். அடிக்கடி எண்ணெய்த் துணியால் இரும்புப் பொருள்களைத் துடைத் தால் துரு ஏருமல் பாதுகாக்கலாம். - (3) கனேந்த கடற்பஞ்சைச் சோப்பின் மீது தேய்த்து அதைக் கொண்டு கண்ணுடி அலமாரிக் கதவுகளேத் துடைத்துப் பிறகு துணியால் துடைத்தால் கண்ணுடி தூய்மையாகும். பமீஸ் கல்ல நீரில் அல்லது மெதிலேறு ஸ்பிரிட்டில் துவைத்துக்கொண்டு கண்ணுடிக் கதவைத் துடைத்தால் எல்லாவித அழுக்குகளும் கீங்கும். ப்யூரெட்டுகள், குடுவைகள் முதலியவற்றைப் போட்டாசியம் டை-குரோமேட்டுக் கரைசலும் சிறிதளவு நீர்த்த கந்தக அமிலமும் கலந்த கலவையைக்கொண்டு துசய்மைப்படுத்த வேண்டும்: ஈரம் உலர்த்த பிறகு அவற்றின் இருப்பிடத்தில் வைக்கவேண்டும். விரைவில் உலர வேண்டுமானுல் காற்றுலேயில் வைத்து உலர்த்தலாம். (4) மெதிலேறு ஸ்பிரிட்டில் ஷெல்லாக்கை வெயில் வெப்பத்தைக் கொண்டு கரைத்து அதை மரப் பொருள்களின் மீது பூசி மெருகேற்றலாம். இரண்டு தடவை பஞ்சைக்கொண்டு பூசிஞல் கன்ருக மெருகேறிவிடும். (5) சோதன்ைச் சாகலயிலுள்ள மேசைகளின் மேற்பக்கம் மெருகேற்றப்பட்டிருக்காது. அமிலங்களால் அரிக்கப்படாதிருக்க மெழுகுப் பூச்சுப் பூசவேண்டும். பாரஃபின் மெழுகை இதற்குப் பயன் படுத்தலாம். ஒரு பெரிய சீனுப்பாத்திரத்தில் மெழுகை உருக்குதல் வேண்டும். உருகிய திரவத்தை ஒரு துரிகையைக்கொண்டு மேசையின் மேற்பக்கத்தில் ஒரே மாதிரியாகப் பூசவேண்டும். சூடான இஸ்திரிப் பெட்டி’யைக் கொண்டு மேசையைத் தேய்த்தால் மெழுகு ஒரே மாதிரியாகப் பரவும். உலர்ந்த பிறகு அதிகமாகவுள்ள மெழுகை மழுங்கிய கத்தியால் சுரண்டிவிட்டு முரட்டுத் துணியால் துடைத்து விடுதல்வேண்டும். (6) சோதனைச் சாலேயிலுள்ள கழிர்ேத் தொட்டியை கறை படி யாமல் மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சாயக்கறை