பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. ஆய்வகம் : பாதுகாப்பும் முதலுதவியும் ஆய்வகத்தின் கண்காணிப்பு பள்ளி அறிவியல் ஆசிரியரின் பொறுப்பிலிருக்கும் என்பதை முன்னர்க் கண்டோம். ஆய்வகத்தில் உள்ள பொருள்களே அமைத்துப் பாதுகாக்கும் முறைகளையும் அறிந்தோம். ஆய்வகத்தில் பல்வேறு சிறு விபத்துகள் எதிர்பாராத வகையில் நேரிடக்கூடும். அவற்றை அறிவியல் ஆசிரியர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்; சிந்தித்து முன்னேற்பாடுகள் செய்தால், தவிர்க்கக் கூடியவற்றைத் தவிர்க்கலாம். முற்றும் தவிர்க்க முடியாவிடினும், நேரிடும் விபத்துகளைக் குறைக்கலாம். எனவே, ஆ ப் வக க் கண்காணிப்பில் சில பாதுகாப்பு முறைகளே மேற்கொள்ளல் வேண்டும். அவற்றை ஈண்டுக் கவனிப்போம். பாதுகாப்பு முறைகள் முன்னேற்பாடுகள் : (1) ஒவ்வொரு சோதனைச் சாலேயிலும் அடியிற் குறிப்பிட்டுள்ள பொருள்களே எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்தல் வேண்டும் ஆண்டின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்தில் அவை சரியாக இருக்கின்றனவா என்று சோதித்தல் இன்றியமையாதது. - (அ) ஆடைகள் தீப்பற்றிக் கொள்ளும்பொழுது அணேப்பதற்காக ஒரு கம்பளம் அல்லது சமுக்காளம்: (ஆ) குறைந்த அளவாவது ஒரு வாளி நிறைய மணல்: (இ) ஒரு வேதியியல் கெருப்பு அசீனப்பான் ; (ஈ) ஒரு முதலுதவிப் பெட்டி முதலுதவிகளேச் செய்யும் முறைகள்பற்றிய குறிப்புக் கையேடு : எல்லா அறிவியல் ஆசிரியர்களும் முதலுதவி தரும் முறைகளே நன்கு அறிந் திருத்தல் மிகவும் இன்றியமையாதது : (உ) வெடித்தல் நேரிடக்கூடிய சோதனேகள் செய்யப்பெறுங்கால் உறுதியான பலகைக் கண்ணுடி: (ஊ) எளிதில் எரியும் பொருள்களேக் கொண்ட சோதனைகளில் மேசையின்மீது வைப்பதற்கு ஒர் அஸ்பெஸ்டாஸ் அட்டை : 8 سم ، لا . بقي