பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வகம்-பாதுகாப்பும் முதலுதவியும் 1 24 ,ـ.س...»د (16) எக்காரணத்தை முன்னிட்டும் எரியும் வாயு, நீர், மின்சாரம் ஆகியவற்றை வீளுக்குதல் கூடாது. தேவை முடிந்தவுடன் குழாய் களே மூடுதல்வேண்டும் சொடுக்கியையும் அமர்த்திவிட வேண்டும். 17) சோதனையின் இறுதியில் து&ணக்கருவிகளேயும் பிறவற்றை யும் அவை இருந்த இடத்திலேயே திரும்ப வைத்தல் வேண்டும். | 18) ஐயம் நேரிடும்பொழுதெல்லாம் மாணுக்கர்கள் ஆசிரியர்ை வினவி அதை போக்கிக் கொள்ளுதல் வேண்டும் ; இதில் சிறிதும் தாமதம் கூடாது. - இன்னும் இத்தகைய விதிகளைத் தேவைக்கேற்றவாறும் தனிப் பட்ட சோதனைச்சாலேகளே யொட்டியும் உண்டாக்கிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக வேதியியற் சோதனைச்சாலையில் சூடான சோதனைக் குழாய்கள், அடர் அமிலங்கள், விபத்துகளைத் தரவல்ல சோடியம், ஃபாஸ்வரம் போன்ற பொருள்கள் ஆகியவற்றைக் கையாளும் முறை களேயொட்டி விதிகளே ஆக்கலாம். - முதலுதவி : வந்தபின் காப்பதைவிட வருமுன் தடுப்பது சிறந்தது. என்பது அறிவியல் ஆசிரியரின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். என்னதான் நல்ல முறையில் பயிற்றுவித்தாலும், திறன்களைக் கைவரச் செய்தாலும், விதிகளே ஆக்கினுலும் அவற்றையும் மீறிச் சில சமயம் சோதனைச்சாலைகளில் தற்செயலாகச் சில விபத்துகள் நேரிடுதல் கூடும். அவற்றை அறிவியல் ஆசிரியர் திறமையுடன் சமாளிக்கத் தான் வேண்டும். அவைபற்றிய ஒரு சில குறிப்புகளே ஈண்டுத் தருவோம். - சில விபத்துகள் : சோதனைச்சாலைகளில் நேரிடக்கூடிய விபத்து களேக் கீழ்க்கண்ட தலைப்புகளில் அடக்கலாம் : (அ) வெட்டுக் காயங்களும் கீறல்களும் ; (ஆ) தணற் புண்களும் அழற் புண்களும்: (இ) கண்ணில் நேரிடும் ஊறுகள்: (ஈ) சில வாயுக்களைச் சுவாசித்தலால் நேரிடும் விபத்துகள்: (உ) நஞ்சுள்ள அல்லது அபாயகரமான வேதியியற் பொருள் களே வாயில் போடுவதால் நேரிடும் விபத்துகள் : (ஊ) மின் விசையால் ஏற்படும் அதிர்ச்சிகள். இத்தகைய விபத்துகள் நேரிடாது காத்துக்கொள்ளும் முறை களேச் சோதனைச்சாலையில் அநுபவமுள்ள ஆசிரியர்கள் நன்கு அறிவர். கண்ணுடிக் குழல்கள் கண்ணுடிப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கையாளும் பொழுது விழிப்புடனிருந்தால் வெட்டுக் காயங்கள் முதலியவற்றைத் தவிர்க்கலாம். அடுப்புகளையும் சூடான திரவங்கள் உள்ள பாத்திரங்களேயும் மேசையின் பின்புறம் கழிநீர்த் தொட்டிக்கு