பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அறிவியல் பயிற்றும் முறை ^w அப்பால் வைத்துவிட்டால் சுடுபுண்களும் அழற்புண்களும் நேரிடாமல் தடுக்கலாம். இதனுல் வேதியியல் துஇணக்கருவிகள் வெடித்தலாலும் திரவங்கள் தெறித்தலாலும் கண்களுக்கு நேரிடும் விபத்துகளேயும் தடுக்கலாம். அபாயகரமான வாயுகஅளக்கொண்டு செய்யும் சோதனை களே கச்சு ஆவி போக்கியில்தான் செய்தல்வேண்டும் : அல்லது திறந்த சாளரத்தின் அருகிலும் செய்யலாம். அபாயகரமான திரவங்களே வாயால் உறிஞ்சுதலைக் கூடியவரை நீக்குதல் நன்று. குறிப்பிட்ட அளவு அத்திரவங்கள் தேவைப்பட்டால் அவற்றை நிறுத்து எடுக்க வேண்டும் : அன்றி பியூரெட்டைப் பயன்படுத்தியும் எடுத்துக் கொள்ளலாம். மேசையையும் கைகளையும் துப்புரவாகவும் தூய்மை யாகவும் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே வற்புறுத்துதல் வேண்டும். சோதனைச்சாலையில் உணவு கொள்ளும் பழக்கமே கூடாது. எதிர்பாராது நேரிடும் விபத்துகளே உடனே சமாளிக்கவேண்டும். முதலுதவி என்பது மருத்துவர் அளிக்கும் உதவிக்குப் பதிலாக அளிக்கப்படும் உதவி அன்று என்பதையும், அது மருத்துவர் உதவி அளிக்கப்படுவதற்கு முன் விபத்துகளின் தீவிரத்தைக் குறைப் பதற்கும் மேலும் வளராது பார்த்துக்கொள்வதற்கும் அளிக்கப்பெறும் உதவியே என்பதையும் ஒவ்வோர் ஆசிரியரும் அறிதல் வேண்டும். எனவே, அறிவியல் ஆசிரியர்கள் முதலுதவி பற்றிய ஒரு சில செய்தி களே நன்கு அறிந்திருத்தல் இன்றியமையாதது. செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் கழகத்தாரால் தரப்பெறும் முதலுதவிப் பயிற்சியை ஒவ்வோர் ஆசிரியரும் பெற்றிருத்தல் வேண்டும். பயிற்சியில் பெறும் அனேத்தையும் ஈண்டு எடுத்துக்கூறுதல் இயலாது : ஒரு சில இன்றியமையாத செய்திகளை மட்டிலும் ஈண்டுத் தருவோம். விரிவை முதலுதவிபற்றி வெளியாகியுள்ள நூல்களில் கண்டு கொள்க. முதலுதவிபற்றிய பொதுக் குறிப்புகள் : எந்த விபத்தையும் அதைப் பற்றித் தெளிவு ஏற்படும்வரை அபாயமானதாகவே கொள்ள வேண்டும். கண்களில் ஏற்படும் விபத்துகள் அனேத்தும் மிகவும் அபாயமானவை என்றே கருதுதல் வேண்டும். முதலுதவி அளித்த சிறிது நேரத்தில் பலன் காணுவிட்டால் உடனே மருத்துவர் உதவியை காடுதல்வேண்டும். - - - பள்ளிக்கும் மருத்துவ கிலேயத்திற்கும் தொடர்பு வைத்துக் கொண்டால் நிலைமைகளே நன்கு சமாளிக்கலாம். இத்தகைய தொடர்பு இருந்தால்தான் மருத்துவ உதவிகளே எளிதில் பெறலாம். பள்ளி மாளுக்கர்களிடம் ஒவ்வோர் ஆண்டுப் பகுதிக்கென ஒரு சிறு தொகையைத் தண்டல் செய்து அப்பணத்தைக் கொண்டு மருத்துவ சாலேயின் உறவை அடையலாம். பள்ளி ஆட்சியாளர் இப்பொறுப்பை மேற்கொண்டால் இத்தொடர்பு திறனுடன் செயற்படும்.