பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


428 அறிவியல் பயிற்றும் முறை میتخم سم^-ہجیرہ" தன்மையற்ற பொருளே விழுங்க நேரிட்டால், வாந்தி மருந்தை உட்கொண்டு வாந்தி எடுக்கச் செய்தல் வேண்டும் , வரந் தி எடுத்த பிறகு, உணவுக் குழலேப் பதப்படுத்தும் மருந்தை உட்கொள்ளுதல் வேண்டும். உப்புக் கரைசல் எளிதில் கிட்டும் வாந்தி மருந்தாம் ; ஆலிவ் எண்ணெய் பதப்படுத்தும் மருந்தாகும். அரிக்கும் அல்லது எரிக்கும் பொருள்களே விழுங்க நேரிட்டால், சளிச்சவ்வு மிகவும் கெட்டுப் போகும். இங்கிலேயில் வாக்தி மருந்தைப் பயன்படுத்துதல் ஆகாது. கார்பாலிக அமிலம், ஆர்செனிக்கு, மெர்க்குரி நஞ்சுகள் ஆகியவற்றை விழுங்க நேரிடுங்கால் பேதி மருந்தைப் பயன்படுத்துதல் வேண்டும். விழுங்கின பொருள் அமில மாக இருந்தால், தெளிந்த சுண்ணும்பு நீரைப் பயன்படுத்துதல் வேண்டும். எல்லா அமிலங்களுக்கும் சோடியம் பை-கார்பனேட்டைப் பயன்படுத்தலாம் ; ஆக்ஸாலிக அமிலத்திற்கு மட்டிலும் இது கூடாது. - காரங்களை விழுங்க நேரிடுங்கால் சிட்ரிக அமிலக் கரைசலேப் பயன்படுத்துதல் வேண்டும் அதன்பிறகு பதப்படுத்தும் மருந்தை உட்கொள்ளுதல் வேண்டும். எல்லாவித நஞ்சுகளுக்கும் திட்டமான மாற்று மருந்துகள் உள. எடுத்துக்காட்டாக ஆர்சினிக்கு கஞ்சுக்கு கூழ்நில அயக ஹைடிராக்ஸைடைப் பயன்படுத்துதல் வேண்டும். ஆனல் - இத்தகைய பொருள்கள் ஆய்வகங்களில் உடனே கிட்டாதவையாதலின் - அவற்றைப்பற்றிக் கூறுவதில் பயனில்லை. அன்றியும், ஆய்வகத்தில் கடுமையான நஞ்சுப் பொருளே உட்கொள்ளும் சந்தர்ப்பமே நேரிடாது. அப்படி நேரிட்டால் மருத்துவர் வருவதற்கு முன் ஆலிவ் எண்ணெய் அல்லது முட்டையின் வெண் கருவை உட்கொள்ளச் செய்தால் போதுமானது. ஃபாஸ்வர நஞ்சுக்கு மட்டிலும் எண்ணெயைப் பயன்படுத்துதல் ஆகாது. - தொலைபேசி வசதியிருந்தால் உடனே மருத்துவரைக் கலந்து அவர் சொற்படி செய்தலே அனைத்திலும் சிறந்தது அறிவுக்குப் பொருத்த மான செயலும் அதுவே. . . மின்விசையால் ஏற்படும் அதிர்ச்சிகள் : மின்விசையால் அதிர்ச்சி நேரிட்டால் முதலில் மின் ஒட்டத்தை நிறுத்த வழி தேட வேண்டும் : சொடுக்கியைப் போட்டு நிறுத்த முடிந்தால் கிறுத்துவது நன்று. அ.து. இயலாவிட்டால் கோயாளியிடமிருந்து கம்பியை அகற்ற வேண்டும் ; அல்லது நோயாளியைக் கம்பியிடமிருந்து நீக்க வேண்டும். வெறுங்கையைப் பயன்படுத்தி இவ்வாறு செப்தல் ஆகாது. உலர்ந்த கோல், உலர்ந்த கயிறு, உலர்ந்த மேலங்கி, உலர்ந்த செய்தித்தாள், உலர்ந்த இரப்பர்ப்பொருள் முதலியவற்றைக் கொண்டும் அகற்றலாம். எக்காரணத்தைக் கொண்டும் உலோகப் பொருளேயோ தரமான பொருளையோ பயன்படுத்துதல் ஆகாது. ஒன்றற்கு மேற்பட்ட கம்பிகளினால் தீண்டப் பெற்றிருந்தால், அவற்றின் குறுக்கே ஒர்