பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 அறிவியல் பயிற்றும் முறை 1. துணைக்கருவிகளும் பிற பொருள்களும் : கற்பித்தலில் துணேக் கருவிகளேக் கையாள்வதில் பிற ஆசிரியர்களேவிட அறிவியல் ஆசிரியருக்கு வாய்ப்புகள் அதிகம். ஆய்வகத்தில் கிடைக்கும் துணேக் கருவிகளேயும் பிறபொருள்களேயும் அவர் தேவையானபொழுது விருப்பப்படிக் கையாளலாம். எனவே, அறிவியல் ஆசிரியர் ஆய்வகத்தி லுள்ள பொருள்களே மாளுக்கர் கண்ணில் நன்கு படும்படி நல்ல முறை யில் அமைத்துவைக்க வேண்டும். படிமங்கள், துணைக்கருவிகள் கண்ணுடிச்சாடியில் பாதுகாக்கப்பெறும் பிராணிகள் முதலியவ ற்றைக் கண்ணுடி அலமாரிகளில் வைத்தல்வேண்டும். நுட்பமான கருவிகளே பீரோக்களில் பூட்டிவைத்தல் வேண்டும். வேதியியற் பொருள்களைப் போத்தல்களில் வைத்து அவற்றின்மீது பெயர் எழுதிய சிட்டுகளே ஒட்டுதல்வேண்டும். அவை நல்லமுறையில் மானக்கரின் கவனத் திற்குக் கொண்டுவரப்பெருததால் சிலர் தாமிர சல்ஃபேட்டுப்படிகங்கள் நீலநிறமாக இருக்கும் என்பதையும், அயச சல்ஃபேட்டுப் படிகங்கள் பச்சை நிறமாக இருக்கும் என்பதையும்கூட அறியார். கற்பித்தலில் ஆசிரியர் மேற்கொள்ளும் சில சாதனங்களைப்பற்றி ஈண்டு ஒரு சிறிது அறிவோம். 2. கரும்பலகை : ஆசிரியருக்கு அமையும் துணைக்கருவிகளில் கரும்பலகையும் ஒன்று. மிகச் சாதாரணமான பொருள்தான்; ஆனல் பெரும்பாலோர் அதைக் கையாள வேண்டிய முறையில் திறமையாகக் கையாள்வதில்லை. வண்ணச் சீமைச் சுண்ணும்புக் கட்டிகளின்றி அறிவியல் ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைதல் கூடாது. அவற்றின் துணைக்கொண்டு வரைப்படங்களின் முக்கிய பகுதிகளை மாளுக்கரின் கவனத்திற்கு நல்ல முறையில் கொண்டுவருதல் முடியும். எடுத்துக் காட்டாக மனிதனுடைய மார்பு, வயிறு ஆகியவற்றிலுள்ள உறுப்பு, களே வரைந்து காட்டும்பொழுது துரையீரல், இதயம், கல்லீரல், மண்ணிால், குடல்கள் முதலியவற்றை ஒவ்வொரு வண்ணத்தில் காட்டில்ைதான் மாளுக்கர்களுக்கு ஒருவிதத் தெளிவு பிறக்கும் : அவற்றை நன்கு அறிந்துகொள்ளவும் கூடும். கண்ணுடியில் பிரதி பலிக்கும் கதிர்களேயும், ஊடுருவி விலகிச் செல்லும் கதிர்களையும் தனித்தனி வண்ணத்தில் காட்டினுல்தான் நன்கு விளக்கம் ஏற்படும். பல்வேறு ஒளிக் கருவிகளின் வழியாக ஊடுருவிச் செல்லும் கதிர்களே வண்ணச் சீமைச் சுண்ணும்புக் கட்டியினுல்தான் நன்கு வரைந்து காட்ட முடியும். ஒரு மரத்தின் வேர், இலே முதலியவற்றை வெண்மை யான சீமைச் சுண்ணும்புக் கட்டியால் வரைந்து காட்டுவதைவிட இலைகளேப் பச்சை நிறத்தாலும், வேர்களைப் பழுப்பு நிறத்தாலும் வரைந்து காட்டுவது சிறந்தது. பூவின் பல பாகங்களைப் பற்றிக் கற்பிக்க நேரிடுங்கால் பூவின் பட்ம் வரைந்து அதன் அகஇதழ், புற இதழ், அண்டகோசம், அண்டாசயம், மகரந்தக் கேசரங்கள்,

    • مہمہمی~مہمہ۔م۔--سہ ہم۔