பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#36 அறிவியல் பயிற்றும் முறை வைத்திருத்தல் ஆகாது. மாளுக்கர் கவனத்தை ஈர்க்க வேண்டுமால்ை அவற்றை உடனுக்குடன் நீக்கிப் புதியனவற்றை அமைக்கவேண்டும். 5. பள்ளித் தோட்டம் : பள்ளித் தோட்டம் எல்லா கிலேப் பள்ளிகளுக்கும் இன்றியமையாத ஒர் உறுப்பாகும் : இயற்கைப் பாடம், உயிரியல் பகுதிகளைக் கற்பிப்பதற்குப் பள்ளித்தோட்டம் சிறந்த சாதனமாக உதவக்கூடியது. தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றிய தகவல்களே உரிய நூல்களில் கண்டு கொள்க. கற்பிக்கும் சாதனமாக உதவும் ஒரு சில குறிப்புகளே மட்டிலும் ஈண்டுத் தருவோம். காய்கறித் தோட்டம் போடுதல், விதை முளேத்தல், உர வகைகள், எருவிடும் முறைகள், காற்றங்கால் அமைக்கும் முறைகள், பல்வேறு தாவரங்களேப் பயிரிடும் முறைகள், பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கவனித்தல், தாவரங்களேப் பீடிக்கும் கிருமிவகைகள், கோய்வகைகள், நோய்களேப் போக்கும் முறைகள், மண்வகைகள், நிலவகைகள் முதலிய பல்வேறு செய்திகளே அதுபவ முறையில் கற்பதற்குத் தோட்டம் துணையாக அமையும். மண்வெட்டி, களைக்கொட்டு, புல்வெட்டி போன்ற பயிர்த்தொழிலுக்குரிய கருவிகளேக் கையாளும் முறைகளையும் மானக்கர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். தொடக்கநிலைப் பள்ளி மானுக்கர்களுக்கு இயற்கைப் பாடம் கற்பதற்குத் தோட்டத்தைப்போல் பயன்படக்கூடிய வேறு சாதனமே இல்லை என்று கூறலாம். பிற பாடங்களை இணைத்துக் கற்பிப்பதற்கும் தோட்டம் நன்கு பயன்படும். கல்வித் திட்டத்தில் தோட்டவேலே ஒர் அச்சாணி போன்றது என்று கூறினுலும் அது மிகையாகாது. - 6. வேறு வாய்ப்புத் திறன்கள் : உற்றுநோக்கலும் சோதனை செய்தலும் அறிவியல் பயிற்றலின் உயிர் நாடிகளாதலின், மேற்கூறிய வற்றைத் தவிர வேறு சில வாய்ப்புத் திறன்களைப் பள்ளியில் அமைக்கலாம். - - (அ) அறிவியல் மூல வகுப்பறையில் ஒரு மூலேயைத் தனியாக ஒதுக்கி அதனே அறிவியல் மூலே (Science Corner) என்று வழங்கலாம். இம்மூலையில் காட்சியாக இருக்கக்கூடிய பொருள்களைக் கொணருமாறு மாளுக்கர்களே ஏவலாம். சோதனை செய்தலுக்கும் பொருள்களைக் காட்சியாக அமைப்பதற்கும் ஒன்று அல்லது இரண்டு மேசைகளைக் கைவசப்படுத்தி வைக்கலாம். சிறுவர்கள் கொண்டுவரும் பொருள்கள் நீண்டகாலம் மே ைசயி ன் மீது இருக்க அநுமதித்தலாகாது. நாளடைவில் இவற்றைப் பழம்பொருட் காட்சி கிலேயத்திற்கு அனுப்பி விடுதல் வேண்டும். - - 1. Lucy R. Latter : School Gardening for Little Children. Hoskins : School Gardening. Alexander Logen : Principles and Practice of School Gardening. -