பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#40 அறிவியல் பயிற்றும் முறை விசை போன்றவற்றைக் கூறும் இடங்களில் ஆர்க்கிமிடீஸ், சர் ஐசாக் கியூட்டன், போன்ற அறிவியலறிஞர்களின் வாழ்க்கைக் கு றிப்புகள் இடம் பெறுதல் மிகவும் இன்றியமையாதது. பாஸ்டர், லிஸ்டர், எட்வர்ட் ஜன்னர், ரோனல்டு ராஸ் போன்ற அறிவியலறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக்கொண்டு அவர்கள் கண்டறிந்த மெய்ம்மை கள் விளக்கப்பெற்ருல் மாளுக்கர்கட்குப் படிப்பதில் ஒரு கவர்ச்சி ஏற்படுவதுடன் பொருள் விளக்கத்திற்கும் பெருந்துனேயாக இருக்கும் : படிப்பதில் ஒரு விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் ஊட்டும். சோதனைகள் : அறிவியல் வெறும் எட்டுப் படிப்பன்று : எத்தனையோ மெய்ம்மைகள் செய்முறைகளால் அ றி ய ப் ப ட வேண்டியவை. எனவே, ஏற்ற இடங்களில் சோதனைக் குறிப்புகள், சோதனையைச் செய்யும் முறை, இயற்கைப் பாடம் போன்றவற்றில் மானுக்கர்கள் தோட்டம், வயல் முதலிய இடங்களில் உற்றுநோக்க வேண்டிய குறிப்புகள்பற்றிய செய்திகள் இடம் பெறுதல் வேண்டும். அறிவியல் நூலில் செயல்முறை பற்றிய குறிப்புகளும் விளக்கப் படங்களும் மிகமிக இன்றியமையாதவை என்பதை அறிதல் வேண்டும். விளக்கப் படங்கள் : அறிவியல் நூல்களில் படங்கள், வரிப் படங்கள், விளக்கப் படங்கள், அறிவியலறிஞர்களின் உருவப் படங்கள் முதலியவை இடம் பெறுதல் மிகவும் இன்றியமையாதது. சோதனைக் கருவிகள், துணைக்கருவிகள், செய்முறைகள் ஆகியவற்றை வரிப் படங்களால் விளக்கிக் காட்டில்ை அவை பொருள் விளக்கத்திற்குப் பெருந்துணையாக இருக்கும். படங்களின் ஒவ்வொரு பகுதிகளேயும் தக்க எண்கள் அல்லது எழுத்துகளால் குறிப்பிட்டு அவை எவற்றைக் குறிக்கின்றன என்பதையும் நன்கு விளக்குதல் வேண்டும். ஒரு பொறி எவ்வாறு இயங்குகின்றது என்று வரிப் படத்தால் விளக்கிக் காட்டும் சந்தர்ப்பத்தில் அப்பொறியின் பல்வேறு பகுதிகளேயும் தனித்தனி யாகவும் வரிப்படங்களால் விளக்கிக் காட்டலாம். பொறி இயங்கும் பல்வேறு படிகளேயும் தனித்தனி வரிப்படங்களால் விளக்கினுல் அ.து மேலும் தெளிவாகும். சில அறிவியலறிஞர்களின் உருவப்படங்களும் இடம் பெறுதல் மிகவும் இன்றியமையாதது. - பிற குறிப்புகள் : பாடநூலில் சேர்க்கப்பெற்றுள்ள விதிகள் எவ்வெவ்வாறு அன்ருட வாழ்க்கையில் பயன்படுகின்றன என்பதை ஆங்காங்கு விளக்கி யிருத்தல் வேண்டும். மேற்படிவங்களுக்குரிய பாடநூல்களில் பெளதிக, கணித மாறிலிகளும் வாய்பாடுகளும் அடங்கிய பட்டியொன்று சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும். ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலோ அன்றி ஒவ்வொரு பகுதியின் இறுதியிலோ சில வினுக்கள் காணப்பெறுதல் வேண்டும் : சில புதுமுறை வினுக்களும் சில கணக்குகளும் பயிற்சிகளாகக் கொடுக்கப் பெற்றிருந்தால் அவை பயின்ற விதிகளுக்கு விளக்கங்களாக அமைதல் مہماحمہیہ صیحیشیتمی دمہ۔ صبیحہ