பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$42 அறிவியல் பயிற்றும் துறை அமைந்துவிடுகின்றது. சில சமயம் ஆசிரியர்கள் நூலிற்கு அடிமையாகி அதையே ஒரு மறை நூல் போல் மேற்கொண்டு மொழிப் பாடம்போல் கற்பிக்கவும் ஏதுவாகி விடுகின்றது. இதல்ை அறிவியல் பாட நோக்கமே சிதைக்கப்பட்டு விடுகின்றது. நூல் எழுதுவதில் பெரும்பாலோர் வ. கு ப் ப ைற அதுபவத்தையோ மாணுக்கரின் மனங்லேயையோ சிறிதும் யோசியாது பல நூல்களேப் பார்த்துப் புதியதொரு நூல் எழுதுவதால், மாணுக்கர்கள் அத்தகைய நூலால் நல்ல பலனே எய்த முடியாமற் போகின்றது. அறிவியல் பாட நூலப் பயன்படுத்தும் முறை . இதைப்பற்றித் திட்டமாக எதையும் கூற முடியாது. ஆசிரியரின் மனப்பான்மைக் கேற்றவாறும் கோக்கத்திற்கேற்றவாறும் இது மாறுபடும். தொடக்கநிலைப் பள்ளியில் பயிலும் மாளுக்கர்கட்குத் தக்க மொழியறிவு இல்லாததால், அவர்கள் நூலேப் படித்து மொழியறிவுடன் பொருளறிவையும் பெறுதல்வேண்டும். ஆசிரியர் கற்பிக்க வேண்டிய வற்றைக் கற்பித்த பின்னர், நூலில் அப்பகுதியைப் படித்து வரச் செய்தல்வேண்டும். அதில் சில விளுக்களேக் கொடுத்து விடையிறுத்து. வரும்படியும் கூறலாம். சில சமயம் சில பகுதிகளே. உரக்கப் படித்துக் காட்டி மானுக்கர்களேயும் படிக்கத் தூண்டலாம். இவ்வாறு படித்த பிறகு சில விளுக்கள் மூலம் விடைகளே அவர்களிடமிருந்து வருவித்து அவற்றை அழகான கரும்பலகைச் சுருக்கமாக வளர்க்கலாம் ; இதை அவர்கள் தம் குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளவும் செய்யலாம். மேல் வகுப்புகளில் அவற்றை வீட்டில் மாணுக்கர்களாகவே படிப்பதற்கும், வீட்டு - வேலே செய்வதற்கும் பயன்படுத்தச் செப்யலாம். மாளுக்கர்கள் செய்யவேண்டிய சோதனைகளேப்பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுத்தலாம். ஆசிரியர் வகுப்பில் செய்து காட்டியவற்றை மாளுக்கர்கள் வீட்டில் படித்துக் கொள்வதற்கு நூல் துணேயாக உள்ளது. ஆண்டு முழுவதும் கற்பித்தவற்றை ஒர் ஒழுங்குமுறையில் திருப்பிப் பார்ப்பதற்குப் பாட நூல் பெருந்துணையாக அமைகின்றது. 8. அறிவியல் நூலகம் : அறிவியல் ஒரு பாடமாகக் கற்பிக்கப் பெறும் பள்ளிகளில் அறிவியல் நூலகம் மிகவும் இன்றியமையாதது. அறிவியல் பயிற்றுதலில் இந்நூலகம் பெருந்துணேயாக அமையும். பாட நூலாக இராத பிற அறிவியல் நூல்களைப் பயிலுங்கால் மானுக்கரின் பொது அறிவு பெருக வாய்ப்புகள் ஏற்படும். பாட வேளேயில் ஆசிரியரால் கற்பிக்க இயலாத பல செய்திகஆள மாளுக்கர்கள் நூல்கள் வாயிலாகத்தான் அறிந்துகொள்ளல் வேண்டும். இன்றைய நிலையில் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தொழில்நுணுக்கக் கல்லூரிகளிலும் அறிவியல்துறைகளில் மனநிறைவு கொள்ளும் முறையில் நல்ல நூல்கள் இல்லே என்று கூறப்படுகின்றது.