பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 # 47 ஒவ்வொரு மாதத்திலும் ஆசிரியர், மானுக்கர் குறித்து வைக்கும் குறிப்புகளைச் சரிபார்த்தல் வேண்டும். இதுபற்றிய ஓர் வகுப்பு ஆராய்ச்சியையும் துவங்குதல் வேண்டும். ஆராய்ச்சியில் ஏற்படும் முடிவுகளே அம்மாதத்திற்குரிய இடத்தில் குறிக்கவேண்டும். ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் ஆண்டின் இறுதியிலும் ஆராய்ச்சி செய்தல் நலம் பயக்கும். நன்மைகள் : இயற்கைப் பஞ்சாங்கம் பல்வேறு நன்மைகளே விளேவிக்கும். இ வ் வே லே ஆசிரியருக்கும் மாளுக்கர்களுக்கும் கவர்ச்சியை அளிக்கும். மானுக்கர்களிடம் உற்றுநோக்குங் திறனே வளர்க்கும். இயற்கைப் பாடம் வாழ்வுப் பாடமாக அமைய வழி உண்டு. விதை முளேத்தல், விதைகள் பரவுதல், பறவைகள், இலையுதிர் தாவரங்கள் முதலியவற்றைக் கற்பிக்கும்பொழுது ஏராளமான எடுத்துக்காட்டுகளைத் தரலாம். கல்விச் செலவுகள், கற்றுலாக்கள் முதலியவை பயனுள்ளவையாக அமையும். ஒய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க வழி பிறக்கும். பள்ளிப் படிப்பும் வாழ்க்கை அநுபவமும் இணேந்து செல்லும். சங்கடங்கள் : எல்லாப் பிரிவுகளிலும் இவ்வேலையைத் தொடங்க இயலாது. பள்ளியில் அறிவியல் பாடத்திற்கென ஒதுக்கப் பெற்றுள்ள பாடவேளைகளில் இதை மேற்கொள்வது இயலாத செயல். இவற்றைச் சாக்கிட்டு இவ்வேலையில் இறங்காதிருத்தல் தவறு. மனமிருந்தால், வழி பிறக்கும்.”