பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 149 ٭-مہ۔۔۔ வரவு - செலவுக் கணக்குகளேச் செயலாளரும் பொருட்காப்பாளரு வைத்துக்கொள்ளலாம் ; இதற்கு ஆசிரியர் வழி காட்டுதல் வேண்டும். செயற்குழுவின் பணி : அறிவியற் கழகத்தின் செயற்குழு ஆற்ற வேண்டிய பணிகள் பல. குறிப்பிட்ட கால எல்லேகளுக்குள் வருமாறு கூட்டங்களைக் கூட்ட ஏற்பாடுகள் செய்வது இதன் முதன் வேலேயாகும். ஓராண்டில் நடைபெறவேண்டிய கூட்டங்களே முன்கூட்டியே உறுதி செய்துகொண்டு செயற்குழுவின் அநுமதியின்மேல் செயலாளர் செயலாற்றுதல்வேண்டும். பள்ளி .ே க ர த் தி ற் கு வெளியில் சுற்றுலாக்கள், சிறுதொலைவுப் பயணங்கள் அமைத்தல், அவைபற்றிய செயல்கள் அனேத்தையும் நிறைவேற்றுதல், அறிவியல் நூலகம் அமைத்து நடத்துதல், கழகற்திற்கென அமைந்துள்ள அறையைச் சிறந்த முறையில் வைத்துக்கொள்ளல் போன்ற செயல்களேச் செவ்வனே செய்தல் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ளல் இச்செயற் குழுவின் பொறுப்பாகும். மேற்குறித்தவற்றை அமைக்கும்பொழுது தக்கவர்களிடம் இசைவு கோரல், வாகன வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல், பார்க்கவேண்டிய இடங்களைப்பற்றிய தகவல்களே அறிதல், செலவில் பங்கு கொள்வோருக்கு உணவு வசதிகள் செய்தல், உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல் ஆகிய அனைத்தையும் செயற்குழு நன்ருகக் கவனித்தல் வேண்டும். கூட்டங்கள்: அறிவியற்கழக ஆதரவில் பயன்படக்கூடிய பல்வேறு கூட்டங்களேக் கூட்டலாம். எடுத்துக்காட்டுகளாக ஒரு சிலவற்றை ஈண்டுக் கூறுவோம். ஏதாவது ஒரு பொருளேப்பற்றி மாளுக்கர்களே கூட்டத்தில் பேசலாம். ஒரு பொருளைப்பற்றி ஒருவர் ஐந்து நிமிடங்கள் வீதம் பத்துப் பேர் பேசினும் பேசலாம் : திறமை இருந்தால் ஒரு மாணுக்கனே ஐம்பது நிமிடங்கள் பேசினும் பேசலாம். இயன்றவரை பேச்சுகளைச் சோதனைகள் செய்துகாட்டியோ அல்லது படங்களேக்கொண்டோ விளக்கந் தருதல் வேண்டும். பட விளக்கு களேயும் நழுவங்களேயும் கொண்டோ, மைக்ரோபுரஜெக்டரைப் பயன்படுத்தியோ, எபிஸ்கோப்பைக் கொண்டோ விளக்கந்தரலாம். சில சந்தர்ப்பங்களில் பொம்மைகளைக் (Models) கொண்டும் விளக்கங் தரலாம். எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்றவாறு துனேக்கருவிகள் மாறும். பேச்சுகள் முடிவுற்றதும், பேசப்பட்ட பொருளேக் குறித்து கலந்து ஆய்தல் (Discussion) நடைபெறும். இதில் பலர் பங்கு கொண்டு தத்தமக்கு ஏற்பட்ட ஐயங்களே அகற்றிக்கொள்வர். கழகங்களில் ஆசிரியர்களும் உரைகள் நிகழ்த்தலாம் ; சோதனை களைக்கொண்டோ, பல்வேறு படங்கள், பொம்மைகள் ஆகியவற்றைக் கையாண்டோ .ெ சா ற் .ெ ப ா ழி வு க ள் நிகழ்த்தலாம். பாடங் களேப் பயிலும்பொழுது ஆசிரியர்களின் பேச்சை மானுக்கர்கள் கேட்கும் வாய்ப்புகள் இருக்குமாதலின், கூடியவரை ஆசிரியர்கள்