பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#56 அறிவியல் பயிற்றும் முறை இக்கழகங்களில் பேசுவதைக் குறைத்துக்கொள்ளுதல் வேண்டும். வகுப்பறைகளில் ஆராயப்பெறும் பொருள்களேப்பற்றி இவண் பேசாதிருத்தல் நலம் பயக்கும். பொழுதுபோக்குப் பாணியில் அமையும் வேதியியல் மாந்திரீகம்", "தொலேக்காட்சி', 'இசைக்கருவிகள் எவ்வாறு ஒலிக்கின்றன , பிராணிகள் சிந்திக்கின்றனவா ?’ என்பன போன்ற பொருள்களே மட்டிலும் எடுத்துக்கொண்டு அவர்கள் பேசுதல் வேண்டும். வெளியார் சொற்பொழிவுகள் : இக்கழகத்தில் வெளியார்கள் வந்து பேசும் வாய்ப்புகளும் உள்ளன. ஒரு தீப்பெட்டித் தொழிற் சாலேயைப் பார்வையிட்டுத் திரும்பியதும் அத்தொழிற்சாலை மேலாளரைக்கொண்டு தொழிற்சாலையைப்பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்யலாம். ஒரு பஞ்சு ஆலே அல்லது ஆடையாலேக்குச் சென்று திரும்பியதும் ஆங்குள்ள பொறி இயக்குகரையோ அல்லது தொழில் நுணுக்கக் கலைஞரையோ கொண்டு உரை நிகழ்த்தச் செய்யலாம். செடிகளே வளர்க்கும் ஒரு தோட்டத்தைப் பார்வை யிட்டுத் திரும்பியதும் தாவர இயல் முறைப்படி செடிகளேப் பாதுகாத்து வளர்த்து வரும் அறிஞரைக்கொண்டு பேசச் செய்யலாம். சில சந்தர்ப்பங்களில் செலவுகளுக்கு முன்பு சொற்பொழிவுகளே அமைக்க வும் செய்யலாம். இப் பேச்சுகளிலும் துனேக்கருவிகளும் படவகை களும் பெரும்பயன் விளைக்கும். § கழக ஆதரவில் பொருட்காட்சிச் சுற்றுலாக்கள், படக்காட்சிகள் காட்டல் ஆகியவற்றை நடத்தலாம். இவைபற்றிய விவரங்களைப் பின்னர்க் காண்போம். r 2. சுற்றுலாக்கள் : வகுப்பறைகளில் தாம் கற்பிக்கும் செய்தி களும் செயல்களும் வெளியுலகில் பெரிய அளவில் இடைவிடாது நடை பெற்று வருபவை என்பதை அறிவியல் ஆசிரியர்கள் மாளுக்கர்களுக்கு உணர்த்துதல் வேண்டும். செய்திகளே வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டிலும் பயிற்றுவதால் யாதொரு பயனும் விளையாது. செய்தி களேயும் செயல்களேயும் பயனுள்ள வகையில் மாணுக்கர்கள் அறிந்து கொள்வதற்குச் சுற்றுலாக்கள் பெருந்துணே புரியும். இச் செலவுகள் அறிவியல் பாடத்திற்கன்றி தரை நூல், வரலாறு, சமூக இயல் போன்ற பிற பாட்ங்களுக்கும் பயன்படும். - சுற்றுலா வகை : செல்லும் இடத்தின் சேய்மை, செலவழிக்கும் கேரம் ஆகியவற்றிற்கேற்ப சுற்றுலாக்களே மூன்று வகைகளாகப் பிரிப்பர். அவை : பள்ளி நாட்களில் வகுப்பு நேரத்தில் வெளிச்சென்று உலவி வருதல், விடுமுறை நாட்களில் மேற்கொள்ளும் செலவுகள், தொலைவு இடங்களுக்குச் செல்லும் செலவுகள் என்பவையாகும். மாளுக்கர்களின் வயது, பார்க்கவேண்டிய இடங்கள், அவ்விடங்களில் அறியவேண்டிய செய்திகள் ஆகியவற்றிற்கேற்ப இவை மேற்