பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 153. 11. கூடு (ப்ொருள்கள், கட்டடம், கண்ட இடம்-மரக்கிகள: பொந்து, மலே இடுக்கு.) 12. முட்டைகள் : (எண், அளவு, நிறம் முதலிய விவரம் போன்றவை.) மாளுக்கரின் வயது, அறிவுநிலை, பட்டறிவு முதலியவற்றிற்கேற்ப இத் தலைப்புகள் மாறுபடும். செல்லும் இடங்களுக்கேற்பவும் கானும் துறைகளுக்கேற்பவும் இவை அமைதல் கூடும். சுற்றுலாவில் ஆசிரியரின் பொறுப்பு : சுற்றுலாக்களே அமைப்பதில் ஆசிரியர் பெருங் கவனம் செலுத்துதல் வேண்டும் ; ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும். அறிவியல் க ழ க த் தி ன் ஆதரவில் இதனே மேற்கொள்ளலாம். செல்லும் இடங்களைப்பற்றியும் காணும் நிகழ்ச்சிகளைக்குறித்தும் ஆசிரியர் முன்னரே அறிந்திருந்தால் சாலப் பயன் தரும், சுற்றுலாக்கள் வெறும் களியாட்டம்போல் இல்லாதிருக்க வேண்டுமானுல் அ.து ஆசிரியர் போடும் திட்டம், மேற்கொள்ளும் ஆலோசனை ஆகியவற்றைப் பொருத்தது. சுற்றுலாக்களே நடத்துங்கால் செலவுக்கு முன் போதனை, செலவின்பொழுது போதனை, செலவிற்குப் பின் போதனை என்ற மூன்று பிரிவுகளாக வகுத்துக்கொள்ளலாம். இன்ன நோக்கத்துடன் செலவு நடைபெறுகின்றது என்பதையும், மாளுக்கர்கள் இன்னின்ன காட்சிகளேக் காணல்வேண்டும், இன்னின்னவற்றை ஆராய்ந்தறிதல் வேண்டும் என்பதையும் முன்னரே வகுப்பிலேயே ஆசிரியர் விளக்கிவிட வேண்டும். இவ்விளக்கம் மாணக்கரின் அறிவு கிலே, கற்கும் வகுப்பு நிலை ஆகியவற்றிற் கேற்றவாறு மாறுபடும். செலவின்பொழுது அவர்கள் பேணுக்கத்தி, உருப்பெருக்கி, சிறிய குறிப்பேடு, எழுது கோல்கள், கித்தான் பை, மை ஊறுந்தாள், மாற்று உடைகள் போன்ற பொருள்களே மறவாமல் எடுத்து வருதல் அவசியம் என்பதை உணர்த்த வேண்டும். செலவின்பொழுது இயற்கைப் பொருள்களே அவர்கள் விருப்பம்போல் கண்டு களிக்க ஆசிரியர் இசைவு தருதல் இன்றியமையாதது. பொருள்களே நேரில் கானும்பொழுது மானுக்கர் களுக்கு ஏற்படும் ஐயங்களை ஆசிரியர் ஆங்காங்கே அகற்றுதல் வேண்டும். தாம் பார்த்தவற்றைப்பற்றிச் சிறு குறிப்புகள், விளக்கப் படங்கள் முதலியவற்றைக் குறிப்பேடுகளில் அவ்வப்பொழுதே குறித்துக்கொள்ளச் செய்தல் நலம். செலவின்பொழுது பள்ளிப் பொருட்காட்சிக்குப் பயன்படக்கூடிய பொருள்களைச் சேகரிக்கும்படியும் துரண்டலாம். செலவு முடிந்து திரும்பிய பிறகு வகுப்பில் மானுக்கர்கள் தாம் கண்டவற்றைப்பற்றி உரையாடியும் அவர்கள் புரிந்துகொள்ளும் திறனேயறியும் வினுக்களை விடுத்தும் கண்ட பொருள்களேப்பற்றித் தொகுத்தறியச் செய்தல் வேண்டும். அவற்றைப்பற்றிக் கட்டுரைகள் வரையச் செய்தல், படத்தொகுப்பு ஒட்டி தயார் செய்தல், பள்ளி