பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 # 55 காலத்தாலும் பயன்படுத்துவதனுலும் தேய்ந்து கெட்டுப் போன பொருள்களையும் அவ்வப்பொழுது அகற்றி அவற்றிற்குப் பதிலாகப் புதுப்பொருள்களே வைத்தல் வேண்டும். பள்ளிக்கருகிலுள்ள இடங்களில் காணப்பெறும் அருமையான பொருள்களையும் பிற இடங்களிலிருந்து கிடைத்தற் கரியனவும், மனக்கவர்ச்சிதர வல்லனவுமான நல்ல பொருள்களேயும் பொருட்காட்சி கிலேயத்தில் வைத்தலால் பெரும் பயனே எதிர்பார்க்கலாம். நடைமுறையில் மாணுக்கர்கள் பிராணி வகைகள், தாவர வகைகள், கணிப்பொருள் வகைகள், கைத்தொழில் பொருள்கள், சில அரிய பொருள்கள் என்ற பலவகைப் பொருள்களைச் சேகரிக்கலாம். சிறுவர்களிடம் திரட்டுக்கம் மிக அழுத்தமாக அமைந்துள்ளது. அதை நல்ல முறையில் செயற்பட வைக்க வேண்டுமானல் ஆசிரியர் விழிப்புடன் அவர்களே வழிப்படுத்துதல் வேண்டும். கருனேயின்றி பறவை முதலியவற்றின் கூடுகளிலிருந்து களவாடுதல், உயிருடனிருக் கும் பறவைகளின் சிறகுகளைப் பிடுங்குதல், ஒரு கோக்கமுமின்றிச் சேர்க்கும் நோக்கத்திற்காகமட்டிலும் தாவரப் பொருள்களைச் சேர்த்தல், இரக்கமின்றிப் பூச்சி முதலியவைகளே வதைத்தல் போன்றவற்றில் அவர்கள் இறங்காது பார்த்துக்கொள்ளல் வேண்டும்; அவ்வாறு செய்தல் மிகவும் தவறு என்பதையும் வலியுறுத்தி உரைக்க வேண்டும். பொருள்களைச் சேர்ப்போர் ஒரு நோக்கத்தின் பொருட்டே சேர்க்க வேண்டும். என்ன சேர்க்கின்ருேம், எதற்காகச் சேர்க்கின்ருேம் என்பதை அவர்கள் உணர்ந்து திரட்டினுல்தான் முழுக் கல்விப் பயனேயும் எய்தமுடியும். பொருள்களைப் பாதுகாக்கும் முறைகள் : பல்வேறு வழிகளில் சேகரித்துப் பொருள்களைப் பாதுகாத்து வைப்பது பெரும் பொறுப்பாகும். ஈர முறையிலும் உலர்ந்த முறையிலும் பொருள்களப் .பாதுகாக்கலாம். 轩g முறை : ஈர முறை மிகத் திறமையாகக் கையாளப்பட வேண்டியதொன்று. நீர்த் தாவரங்களாக இருந்தால், அவை இருந்த நீரைக் கொணர்ந்து அதில் 2% ஃபார்மலினக் (Formalin) கரைத்து அந்தக் கரைசலில் அப்பொருள்களைப் போட்டு வைத்தல் வேண்டும். 1% குருமியச் சீனயமும் 1% .பார்மலினும் கலந்த கரைசலையும் பயன்படுத்தலாம். பெரிய தாவர வகைகளைப் பாதுகாப்பதில் 3-5% ஃபார்மலின் கரைசலேப் பயன்படுத்துதல் வேண்டும். வெவ்வேறு பிராணிஇனப் பொருள்களுக்கு வெவ்வேறு வித ..பார்மலின் கரைசலைப் பயன்படுத்துதல் வேண்டும். புழுக்கள், மிகச் சிறிய பிராணிகள் போன்றவற்றை 5% ஃபார்மலின் கரைசலிலும், மீன், பாம்பு போன்றவற்றை 10% கரைசலிலும் போட்டு வைத்தல் வேண்டும்.