பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 157 முதலியவற்றையும் இங்கு வைக்கலாம். பள்ளித் தொழிற்சாலேயில் செய்யப்பெறும் நீராவிப்பொறி, தொலைபேசி, மின் ஆக்கப்பொறி, மோட்டார் பொறி முதலியவைகளையும் மெக்கானேவைக்கொண்டு செய்யப்பெறும் பிற சாதனங்களேயும் இங்கு வைக்கலாம். இவ்வாறு சேகரித்த பொருள்கள் யாவற்றையும் தூசு படாதவாறு பெட்டிகளிலும் அலமாரிகளிலும் பாதுகாப்பாக வைத்தல் வேண்டும். பொருள்களை ஒழுங்குபடுத்தி அமைத்தல் ஏராளமான பொருள் களத் திரட்டி வைத்துவிட்டால் அது பொருட்காட்சி நிலையம் ஆதி விடாது. சேமித்த பொருள்களே வகைப்படுத்தி ஒருவித ஒழுங்கில் வரிசையாக அமைத்தல் வேண்டும். பள்ளிப் பொருட்காட்சி நிலையத் தில் பொருள்களே அமைப்பதில் மூன்று கூறுகளே கினேவில் வைத்துக் கொள்ள வேண்டும். அமைப்பு பார்ப்பதற்குக் கவர்ச்சியுடையதாக இருத்தல் வேண்டும். வகுப்புத் தேவைக்குப் பயன்படும்படியான முறையில் அமைக்கவும் வேண்டும். பொருள்களைச் சூழ்நிலையில் இருப்பன போலவும் அமைக்கலாம். கண் கவர் அமைப்பு : நல்ல ஒளி, நிறைந்த சாளரங்கள், வாயில்கள் உள்ள விசாலமானதோர் அறையைத் தேர்ந்தெடுத்து, அதில் பொருட்காட்சியை அமைத்தல் வேண்டும். அறையில் வைக்கப் பெறும் அலமாரிகள், பீரோக்கள், பிறசாதனங்கள் யாவும் தேக்குமரம் அல்லது கருங்காலி மரத்தால் செய்யப்பெற்றிருத்தல் வேண்டும். அவற்றை நன்ருக மெருகேற்றி வைத்தல் வேண்டும். அவற்றிற் கிடையே நடமாடுவதற்குத் தாராளமான இடம் இருக்குமாறு அமைக்க வேண்டும். கண்ணுடிச் சாடிகள் ஏறக்குறைய ஒர் அளவானவைகளாக இருந்தால் அழகாக அமைப்பதற்கு வசதியாக இருக்கும். சாடிகளுக்குக் கண்ணுடி மூடி அல்லது தக்கை மூடி அமைத்தல் நலம் : தகரமூடி கூடாது ; உள்ளிருக்கும் திரவம் எளிதாக ஆவியாகாதிருக்க தக்கை மூடியில் பாரஃபின் மெழுகைத் தடவுதல்வேண்டும். சுவரில் கிடைக்கும் இடத்தையெல்லாம் பொருள்களே வைக்கப் பயன்படுத்துதல் வேண்டும். விலையுயர்ந்த பொருள் வைக்கப்பெறும் அலமாரி, பீரோக்களைப் பூட்டி வைத்தல் வேண்டும். சேகரிக்கப்பெற்ற பொருள்களின் பெயர்கள் எழுதிய சீட்டுகஆர அவ்வவற்றின்மீது ஒட்டுதல் வேண்டும் : அல்லது கட்ட வேண்டும். ஒரு சீட்டைப் பொருள் வைக்கப்பெறும் இடத்திலும், மற்ருெரு சிட்டைப் பொருளின் மேலும் ஒட்டவேண்டும். எழுத்து கெடாதிருப் பதற்குச் சீட்டின்மேல் மெழுகு அல்லது காகித மினுக்கெண்ணெய் அடித்துப் பாதுகாத்தல் வேண்டும். பொருள்கள் வைக்கப்பெற்றுள்ள பெட்டி அல்லது அலமாரியின்மீது நீரில் கரையாத இந்தியா மையால் பொருளின் பெயர், கிடைத்த இடம், தேதி, சேகரித்தவர் பெயர் போன்ற விவரங்களே எழுதி வைத்தல் வேண்டும்.