பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 159. நீர்ப் பிராணிகளேயும் வளர்க்கலாம். ஒரு பெரிய கண்ணுடித் தொட்டியின் அடியில் புதுமணலேயும் சிறு கூழாங்கற்களையும் பரப்பி அதில் ர்ேப்பாசிகளேயும், நீர்ச்செடிகளையும் வளரச் செய்து மீன்கள், தவளைகள் முதலிய பிராணிகளே வளர்க்கலாம். பள்ளித் தோட்டத்தி லுள்ள தண்ணிர்த் தொட்டிகளிலும் இவ்விதப் பிராணிகளை வளர்க்க லாம். தொட்டிகளிலுள்ள நீரை அடிக்கடி மாற்றுவது மிகவும் இன்றியமையாதது. கண்ணுடிப் போத்தல்களில் ஈரமண்ணே வைத்து அதில் மண்புழு போன்ற புழுக்களே வளர்க்கலாம். கம்பளிப்பூச்சி, கீரைப்புழு முதலிய வற்றை 2 அடி நீளமும் 1 அடி அகலமுமுள்ள ஒரு கள்ளிப் பெட்டியில் வளர்க்கலாம். பெட்டியின் முன்புறத்தில் கண்ணுடியையும் பின் புறத்தில் சல்லடைக்கண் போன்ற துவாரங்களுள்ள துத்தநாகத் தகட்டையும் பொருத்தி வைத்தல் வேண்டும். இப்பெட்டிக்குள் இலே களேயும் தழைகளேயும் போட்டுக் கம்பளிப்பூச்சி, இலேப்புழு முதலிய வற்றை வளர்க்கலாம், அவைகள் உருமாறி வண்ணுத்திப் பூச்சி களாகவும் அந்துப் பூச்சிகளாகவும் மாறுவதைக் கவனிக்கச் செய்யலாம். - r TamilBOT (பேச்சு) 05:19, 10 பெப்ரவரி 2016 (UTC) --م--۔-م۔م۔ பள்ளிப் பொருட்காட்சி கிலேயம் நன்முறையில் அமைவதற்கு மூன்று கிலேகள் சரியாக அமைதல் வேண்டும். பொருட்காட்சி சாலைக்குத் தக்கவர் ஒருவர் பொறுப்பாளராக அமைய வேண்டும் ; பொருள்களேக் காப்பதற்கும் சேகரிப்பதற்கும் ஆண்டுதோறும் பணம் செலவழிக்க வேண்டும் : பொருள்களே வைப்பதற்குச் சரியான அறை. வேண்டும். அந்த அறையை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. இம் மூன்று நிலையும் சரியாக அமைந்தால் பள்ளிப்பொருட்காட்சி நிலையம் பாங்குற அமைந்து பல்லாற்ருனும் சிறப்புற்று விளங்கும். அரசாங்கப் பொருட்காட்சி நிலையத்தைக் கண்காணிப்போர், உள்ளுர்க் கைத்தொழில் வல்லுநர்கள் முதலியவர்களின் துணேயையும் ஆலோசனையையும் மேற்கொண்டால் இஃது இன்னும் சிறக்கும். 4. பொருட்காட்சி : ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு தடவையாவது பள்ளி வேலைகளில் அக்கறையுள்ளவர்களேயும் பிறரையும் வருவித்து பள்ளியின் பல்வேறு நடவடிக்க்ைகளைக் காட்டுதல் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பள்ளியிலுள்ள அறிவியல் துறை பெரும் பங்கு எடுத்துக்கொள்ள லாம். அறிவியல் துறையிலுள்ள துனேக்கருவிகளைக் கொண்டு பல்வேறு கவர்ச்சிகரமான சோதனைகளைக் காட்டலாம் ; பழம் பொருட்காட்சி நிலையத்திலுள்ள பொருள்கள் யாவற்றையும் கண்கவர் முறையில் கொலு'வாக அணிசெய்து காட்டலாம். விழாவின் செயல்கள் அனைத்தையும் அறிவியல் கழகத்தின் ஆதரவில் மேற் கொண்டு செய்தால் அனேத்தையும் எளிதில் நிறைவேற்றலாம் :