பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 $ 61 மாளுக்கர்களின் பணி : ஒவ்வொரு வகுப்பிலும் திறமையான மாளுக்கர்களைப் பொறுக்கி எடுத்துச் சில முக்கிய சோதனைகளேப் பார்வையாளர்களுக்கு விளக்கம் செய்யும் பொறுப்பினத் தருதல் வேண்டும். விழாவில் கொண்டுள்ள உற்சாகத்தால் மாளுக்கர்களின் விளக்கம் தொடர்பற்று இருக்கக்கூடும். எனவே, பொருட்காட்சிக்கு முன்னதாக ஒரு சோதனையையாவது ஒத்திகை செய்து பார்க்க வேண்டும் ; எல்லா மாணுக்கர்களும் இந்த ஒத்திகையில் கலந்து கொள்ள வ்ேண்டும். விளக்கும் பொறுப்பை மேற்கொள்வோர் விளக்க அட்டைகளிலுள்ளவற்றை அடிக்கடி படித்துப் பார்ப்பதாலும், சொல்லிப் பார்ப்பதாலும், பிறருக்கு விளங்க வேண்டும் என்று மாளுக்கர்கள் எண்ணி ஒத்திகைபோட்டுப் பார்ப்பதாலும், சோதனை களின் உண்மைப் பொருளே நன்கு உணர்ந்து கொள்வர். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் : பழம் பொருட்காட்சி கிலேயத்தி லுள்ள படங்கள், விளக்கப் படங்கள், வரிப் படங்கள், பொம்மைகள் முதலியவற்றை அப்படியே கொண்டு வந்து கொலு வைத்துவிடலாம். எடுத்துக்காட்டாக காது, கண், மூளே, வயிற்றிலுள்ள உறுப்புகள், மார்புக் கூட்டிலுள்ள உறுப்புகள் ஆகியவற்றின் பொம்மைகள் எல்லோர் மனத்தையும் கவரக்கூடும். உற்சாகமுள்ள ஆசிரியர்கள் சில சோதனைகளே மந்திர சக்தி'போல் ஏற்பாடுசெய்து காட்டலாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமல்லவா : ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களே விழச்செய்வதுதானே திறமைக்கு அழகு ? 5. அறிவியல் ஈடுபாட்டுக் கலைகள் : கல்வி, கைத்தொழில் மனப் பான்மையை நல்கவேண்டும் என்று கல்வி அ றி ஞ ர் க ள் கூறிவருகின்றனர். அறிவியல் ஆசிரியர் இத்துறையில் பெரும்பணி ஆற்றலாம் : அறிவியல் துறையைச் சார்ந்த பல்வேறுவகை ஈடுபாட்டுக் கலைகளே மாணக்கர்கட்கு எடுத்து விளக்கில்ை அவர்கள் அவற்றில் மிக உற்சாகத்துடன் ஈடுபடுவர் ; நல்ல முறையிலும் காலத்தைக் கழிப்பர். தொடக்கத்தில் செலவு அதிகம் ஏற்படாத ஒன்றிரண்டு கலைகளைப் பள்ளியில் தொடங்க ஏற்பாடு செய்யலாம். ஒரே சமயத்தில் பல கலைகளைத் தொடங்குவது உசிதமல்ல ; விரும்பத் தக்கது மன்று. ஏனெனில், எல்லாவற்றையும்பற்றி ஆசிரியர் மானக்கர்களுக்குப் பயன்பெறும் வகையில் குறிப்புகளைத் தருதல் இயலாது ; அதற்கு நேரமும் இராது. பல்வேறு கலைகள் : மை செய்தல், சோப்புச் செய்தல், எண்ணெய்களைத் தூய்மையாக்கல், வாசனை எண்ணெய்களைத் தயாரித்தல், பற்பொடி செய்தல், முகப்பசை செய்தல், சாக்கடை மருந்து செய்தல், கறைகளே நீக்கல், நகமெருகுப் பொருள் செய்தல், மரமெருகுப் பொருள் செய்தல், ஒளிப்படக்கலே, கரும்பலகைப் பூச்சுப் பசை தயாரித்தல், வண்ணப் பொருள்களே மினுக்கெண்ணெயில் ஏற்ற அ. ப. மு-11