பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 1.65 பல்வேறு விதமான கருவிகள் கிடைக்கின்றன. இதில் காட்டப்பெறும் படங்கள் ஒளிப்பட முறையில் அச்சிடப்பெற்றவை. திரையில் விழும் படம் 2 x 3 அளவு இருக்கும் ; வகுப்பில் காட்டுவதற்குப் போது மானது. இக் கருவியால் படம் காட்டப் பெறுங்கால் வகுப்பறையை இருட்டறையாக்குதல் வேண்டும். படங்களைத் தொடர்ந்தாற்போல் அச்சிட்டுச் சுருள்களாக வைத்துக் கொள்ளலாம். 30 அடி நீளமுள்ள சுருளில் 480 படங்கள் இருக்கும் , அதன் எடை 2 அவுன்சுதான் : விலையும் மலிவு. குறைந்த பணத்திற்கு அதிக படச் சுருள்களே வாங்கி வசதியான முறையில் சேகரஞ் செய்து கொள்ளலாம். இக் கருவியால் படங்கள் காட்டப்பெறுங்கால் படங்கள் இடம் மாதி: தில்லை பழுதாகப் போவதுமில்லை. கல்வித் துறைக்கென எல்லாப் பாடங்களிலும் ஏராளமான படங்கள் உற்பத்தி செய்யப்பெற்று விலக்குக் கிடைக்கின்றன. இதில் படம் காட்டுவதற்கு மின் விளக்கு தேவை. - எபிஸ்கோப்பு இக்கருவியால் ஒளி புகாப் படங்களையும் வைத்துத் திரையில் விழச் செய்யலாம். எடுத்துக்காட்டாக ஒரு நூலிலுள்ள படங்களை வெட்டி எடுத்து இதில் வைத்துக் காட்ட முடியும். படத்தில் விழும் ஒளியில் மிகச் சிறு பகுதிதான் திரையில் விழும் திரையில் விழும் படம் தெளிவாக இராது. எனவே, மிக அதிக வாட்-பல்புகள்’ பயன்படுத்தப்பெறுகின்றன. படம் காட்டப்பெறும் அறையையும் நன்ருக இருட்டாக்கி விடவேண்டும். இதில் மின்சாரம் செலவழிவதால் அதிகச் சூடு உண்டாகும் இச்சூட்டைத் தணிவிக்க வேண்டும். மின் விசிறியைக்கொண்டு சூட்டைத் தணிவிக்கலாம். இக்கருவியை வாங்குவதற்கு முன் நன்கு சோதித்துதான் வாங்க வேண்டும். இன்று விலக்குக் கிடைக்கும் பல்வேறு எபிஸ்கோப்பு வகைகளின் (?ෆිෆ அதிகம் : காரணம், அவற்றில் பயன்படும் வில்அலகளின் விலே அதிகம் : வில்லைகளைச் செய்வது எளிதன்று. இருக்கருவி மிகக் கனமானதால் இதை ஒரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நகர்த்துவது சிரமம். இக்கருவியால் காட்டப்பெறும் படங்களும் கவர்ச்சியான முறையில் இருப்பதில்லை. எல்லாவிதப் படங்களேயும் இதில் வைத்துக் தட்ட இயலாது. நல்ல வெள்ளைத் தாளில் சிறந்த முறையில் அச்சிட்ட படங்கள்தாம் இதில் வைத்துக் காட்டப்பெறுவதற்கு மிகவும் ஏற்றவை படங்கள் கிடைக்கும்பொழுது அவற்றைக் கருப்புக் காகிதத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுதல்வேண்டும். இதற்கெனத் தனிப்பட்ட முறையில் படங்கள் செய்ய வேண்டியிராததால், இக்கருவி அதிகமாகப் பயன் படுத்தப் பெறுகின்றது. எபிடயாஸ்கோப்பு : இஃது எபிஸ்கோப்பும் டயாஸ் கோப்பும் (படம் பெருக்கி) இணைந்த ஒரு கருவியாகும். ஒரு சிறிய நெம்பு கோலே இயக்கி இரண்டு கருவிகளாகப் பயன்படுத்தலாம். எனவே,