பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 அறிவியல் பயிற்றும் முறை ~rTamilBOT (பேச்சு)സഹസ്പTamilBOT (பேச்சு)്TamilBOT (பேச்சு). ~ * * - களின் ஐயங்கள் அகலக்கூடும் : ஆசிரியர் தரும் விளக்கமும் క్రొత్త நன்கு பதியும். சிலசமயம் ஒலிப்படத்தில், ஒலியை நிறுத்திவிட்டு ஆசிரியரே விளக்கத்தைத் தரவும் செய்யலாம். காட்டிய பிறகு : படத்தைக் காட்டியபிறகு செய்யவேண்டியவை தான் மிகவும் முக்கியம். படம் பார்த்தலால் மாளுக்கர் பயன் அடைந் தனரா என்பதை ஆசிரியர் கண்டறியவேண்டும். இதைச் சில வினுக் களால் கண்டறியலாம். படத்தில் பார்த்தவற்றைப்பற்றி ஆசிரியர் மாளுக்கர்களுடன் கலந்து ஆராயலாம். ஆராய்ந்தபிறகு மாளுக்கர் அறிந்தவற்றை ஒரு சிறு சோதனையாலும் அறுதியிடலாம் : சரியான நேரம் கிடைக்காவிட்டால் சோதனையை அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம். . . ஃபிலிம்களைக் காட்டுவதுபற்றிய விரிவான செய்திகளே உரிய நூல் களில் கண்டுகொள்க. - - ஃபிலிம்களைப்பற்றிய குறிப்பு: சில ஆண்டுகளாகப் பல்வேறு பாடங் களேப் பற்றிய பிலிம்கள் எடுக்கப்பெற்று கல்வி கிலேயங்களுக்கு வினியோகிக்கப்பெறுகின்றன. ஒலிப் பதிவுடனும் ஒலிப்பதிவு இல்லா மலும் ஃபிலிம்கள் ஆயத்தம் செய்யப்பெறுகின்றன. இரண்டு வகைப் ஃபிலிம்களும் வகுப்பறைத் தேவைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இந்த பிலிம்கள் 35 மில்லி மீட்டர் அகலத்திலும் (1 2/5 அங்.) 16 மில்லிமீட்டர் அகலத்திலும் (3/5 அங்.) தயாரிக்கப்பெறுகின்றன. முதல்வகையில் ஒரு அடி நீளத்தில் 16 படங்கள் இருக்கும். ஒரு படச் சுருளில் 1000 அடி ஃபிலிம் இருக்கும். இதைக் காட்டுவதற்கு 15 கிமிடங்கள் ஆகும். இரண்டாம் வகையில் ஒரு அடி நீளத்தில் 40 படங்கள் இருக்கும். இந்த வகைச் சுருளின் நீளம் 400 அடி ; இதைக் காட்டுவதற்கும் 15 கிமிடங்கள்தான் ஆகும். இவ்வகைப் படங்களில் தீப்பற்ரு. எந்த இடத்திலும் இவற்றைத் துணிவாகக் கையாளலாம். எனவே, இவ்வகைப் படங்கள்தாம் பள்ளியில் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றவை. . - . ஒலிப்பதிவில்லா ஃபிலிம்கள் : இவற்ருல் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று : விலே குறைவு ; இவற்றைக் காட்டும் கருவியின் விலையும் குறைவே. இரண்டு : இவ்வகையைப், பல்வேறு நிலைகளுக்கு விருப்பப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு கோணங்களில் இவற்றைப் பயன்படுத்தவும் இயலும். ஆனால், இவற்றில் ஒரே ஒரு குறையைக் காட்டலாம். பெரும்பாலோர் ஒலிப்பதிவுப் படங்களைக் கண்டு களித்தவர்களாக இருப்பதால், சிறிதளவு மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். எனினும், இவ்வகைப் படங்கள் என்றும் கட்புலக்-கல்வியில் பெரும்பங்கு கொள்ளும் என்பதற்கு ஐயமில்லை. 1. Weaver and Bollingers Visual Aids. Lási, 238-247.