பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 163.


.----.-------------.---.----- مصمم

ஒலிப்பதிவுள்ள ஃபிலிம்கள் : மிக அண்மையில் இவ்வகைப் படங்கள் உற்பத்தி செய்யப்பெற்று, நடைமுறையில் பயன்பட்டு வரு கின்றன. ஒலியில்ை இயற்கைச் சூழ்நிலையை அப்படியே காட்ட முடி கின்றது. சில அறிவியல் பேரறிஞர்களின் சொற்பொழிவுகளே அப்படியே வகுப்பறைக்குக் கொண்டு வந்துவிட முடிகின்றது : இவ்வகைப் .பிலிம்களின் விலே அதிகம். வாடகைக்கு வாங்கினல் இரண்டு வகைப் ஃபிலிம்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான் செலவாகும். இவ் வகைப் ஃபிலிம்களில் பதிவாகும் ஒலியை மூன்று வகையாகப் பிரிக்க லாம் : (1) படத்தில் வரும் நிகழ்ச்சிகளே வாய்மொழியாக விளக்கம் தரும் ஒலி ; (2) நிகழ்ச்சிகளிலுள்ள இயற்கை ஒலியுடன் (எ-டு. இசைக் கருவிகளின் ஒலி, கடல் அலேகளின் ஒலி போன்றவை) வாய்மொழியாக விளக்கம் தரும் ஒலி ; (3) பின்னணி ஒலியும் வாய்மொழி விளக்க ஒலியும் கலந்த ஒலி. பெரும்பாலும் பள்ளிகளில் காட்டப்பெறும் ஃபிலிம்களில் முதல் இரண்டு வகை ஒலிதான் இருக்கும். இவ்வகைப் ஃபிலிம்களால் காட்டப்பெறும் காட்சிகள் கண்களுக் கும் காதுகளுக்கும் விருந்தாக உள்ளன ; இயற்கைச் சூழலே இருந்த படியே காண வாய்ப்புண்டாகின்றது. படங்களிலுள்ள வாய்மொழி விளக்கம் மெய்ம்மையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. படங்களில் வரும் விளக்கங்களேப் படிப்பதால் உள்ள சிரமம் நீங்குகின்றது. தவிர, இவ்வகைப் ஃபிலிம்களேத் தொடர்ந்து நடைபெறச் செய்யலாம். இடை இடையே விளக்கத்திற்காகப் பட ஒட்டத்தை நிறுத்தவேண்டிய தில்&ல. இன்னும் ஃபிலிம்களை வகுப்பறை வேலையை விளக்குபவை, தொழிற்சாலை நிகழ்ச்சிகளைக் காட்டுபவை, பள்ளி நடவடிக்கைகளைக் காட்டுபவை, நடைமுறையில் ஆங்காங்கு நிகழ்பவைகளே விளக்கு t_636, செய்திகளைத் தருபவை, ஒளிப்பட நாடகங்களேத் தருபவை என் றெல்லாம் பிரிவுபடுத்தியுள்ளனர். அவைபற்றிய அரிய செய்திகளே உரிய நூல்களில் கண்டு கொள்க. அறிவியல் கற்பித்தலில் வகுப்பறை களில் பயன்படுத்தும் ஒரு சிலவகை ஃபிலிம்களே மட்டிலும் ஈண்டுக் காண்போம். எடுத்துக்காட்டு : சில பாடங்களின் பகுதிகளை எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்க நேரிடுங்கால் ஃபிலிம்களைப் பயன்படுத்தலாம். படம் பெருக்கி நழுவங்கள், நூற்படங்கள், கரும்பலகை ஒவியங்கள் முதலிய வற்றைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை இயல்பாக, பாடத்தின் விறுவிறுப்புப் போக்கு கெட்டுப்போகாத வகையில், கையாளவேண்டும். 'சைகிள்:பிலிம்கள் இதற்கு மிகவும் பயன்படும். இவை 50 அடி நீளம் இருக்கும் : அல்லது அளவற்ற சுருளாகவும் இருக்கும். ஒரே 1. McKown and Roberts : Audio-Visual Aids to Instruction— பக். 158-165.