பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - அறிவியல் பயிற்றும் முறை اما برای همیسیسیسمسر காட்சி திரும்பத் திரும்ப வருமாறு அமைக்கப்பெற்றிருப்பதால் அவற் தைக் கண்ணுறும் மானுக்கர்கள் காட்சியை கினேவிலிறு த்திக் கொள்ள எளிதாக இருக்கும். - - பாட அடிப்படை : பாடங்களின் அடிப்படையாகவும் ஃபிலிம்களைப் பயன்படுத்தலாம். ஆசிரியர் ஃபிலிம்களின் உள்ளுறைப் பொருளே முன்னதாகவே தெரிந்து அதைச் சுற்றித் தன்னுடைய பாடம் அமையு மாறு ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். ஆசிரியர் மேற்கொள்ளும் முறைகளுக்கேற்றவாறும் கற்பிக்கும் போக்கு மாறும். சிறந்த பயஆன அடைய வேண்டுமானல் ஒரு சில விதிகளே ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். படம் காட்டுவதற்கு முன்னே பின்னே பாடவே&ளயின் ஒரு பகுதியை ஃபிலிமின் உள்ளுறையைப்பற்றி உரையாடி ஆராய்வதில் செலவிடவேண்டும். தேர்ந்தெடுக்கப்பெற்ற சில வினுக்களை விடுத்து மாளுக்கர்களின் சிந்தனையைத் தூண்டலாம் : உற்றுநோக்கும் ஆற்றலையும் கிளறலாம். இதன்பிறகு மீண்டும் ஒரு முறை படத்தைக் காட்டலாம். இவ்வாறு சில விதிகளைக் கையாள்வதால் மாளுக்கரின் கருத்துணருந்திறன் கன்முறையில் பெருகும். திருப்புதல் : பல பாடங்களின் கருத்தைச் சுருங்கியமுறையில், பத்து அல்லது பதினேந்து நிமிடங்களுக்குள் காட்டவல்ல ஃபிலிம்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திய பிறகு தக்க வினுக்களைக் கொண்டு கலந்தாய்தல் கடைபெறல் வேண்டும். இந்தப் ஃபிலிம்களில், விளக்கக் கோட்டுப் படங்கள், முக்கிய பகுதிகளில் அழுத்தம், சுருங்கிய முறையில் தொகுத்துரைத்தல் முதலிய பண்புகளைக் காணலாம். பின்னணி : பல்வேறு அறிவியல் விதிகளைத் தழுவி சுருங்கிய முறையில் விளக்கம் தரக்கூடிய ஃபிலிம்கள் உள. இவற்றை வகுப்பில் கையாள்வதைவிட பள்ளி மாளுக்கர் அனேவரும் பார்ப்பதற்கு ஏற் பாடுகள் செய்வது கன்று. தொற்று நோய்கள் பரவும் முறைகள், குடி நீர்த் திட்டம் போன்ற பொதுப் பொருள்கள், பல்வேறு கைத்தொழில் துணுக்கங்கள், செய்தி விளக்கங்கள் முதலியவற்றை விளக்கும் படங் களேயும் இம்முறையில் கையாளலாம். படக்காட்சிகளே அடிக்கடி பார்த்து அதே மனப்பான்மையிலிருக்கும் இளைஞர் உலகம், இப்படக் காட்சி களால் பெரும் பயன் அடையும் என்பதற்கு ஐயமில்லை. - ஃபிலிம்களின் வினியோகம் : பண வசதியுள்ள பள்ளிகள் ஒரு சில இன்றியமையாத ஃபிலிம்களே விலைக்கு வாங்கிவைத்துக் கொள்ளுதல் நன்று. கல்வித் துறையினர் மூலமாகவும், அங்கீகாரம்பெற்ற ஒரு சில கிலேயங்களாலும் ஃபிலிம்கள் பள்ளிகளின் தேவைக்காக வினியோகம் செய்யப்பெறுகின்றன. இவ் விவரங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்ற அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெறும். இம்முறையில் கிடைக்கும் படங்களைச் சிறுதொகை செலவுசெய்து வாங்கி நிறைந்த பயனை எய்த லாம். - -