பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& அறிவியல் பயிற்றும் முறை சந்தர்ப்பங்களையொட்டிய,பாடத்திட்டம் : அறிவியல் பாடத்திட்டம் சந்தர்ப்பங்களேயொட்டி அமைந்து இந்நோக்கங்களே நிறைவேற்றுதல் வேண்டும். அவ்வாறின்றி அறிவியல் என்பது வெறும் பெளதிகம் அல்லது வேதியியல்தான் என்ற எண்ணத்தை வளர்க்கும் முறையில் பாடத்திட்டம் அமைதல் கூடாது. தொடக்கநிலைப் பள்ளிகளில் இயற்கைப் பாடத்தைப்பற்றிச் சிறிதளவு கற்பிக்கலாம். நடுநிலப் பள்ளிகளிலும் உயர்நிலப் பள்ளிகளிலும் மானக்கர்கள் பொது அறிவியலேப் பயில வேண்டும். அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் சில செய்திகளே எடுத்து சிறந்த முறையில் அமைந்ததொரு பாடத் திட்டம் இங்கிலப்பள்ளி மாணுக்கர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். நமது காட்டில் பெரும்பாலோர் உயர்நிலைப் பள்ளியுடன் படிப்பை கிறுத்திப் பிற துறைகளில் பிழைப்பை யொட்டிப் புக வேண்டிய நிலையிலிருப்பதால் இத்தகைய பாடத்திட்டம்தான் மிகவும் பொருத்தமானதாகும். - எது அறிவியல் ? : சிறந்த அறிவியல் அறிஞர்களேத் தோற்று விப்பதுடன் அறிவியற் கல்வியின் நோக்கம் முடிந்துவிடக் கூடாது. அந்த கோக்கமும் வேண்டுவதுதான். சிறந்த அறிவியல் அறிஞர்களின் சேவையால்தான் எந்த நாடும் முன்னேற்றமடைதல் வேண்டும். ஆணுல், சாதாரண மக்களும் அறிவியல் அறிஞர்கள் என்ன செய்கின்றனர் ? எதைச் செய்ய முயல்கின்றனர் ? அவற்றை எப்படிச் செய்கின்றனர் ? என்பன போன்ற செய்திகளே அறிந்துகொள்வதும் மிகமிக இன்றி யமையாதது என்றே சொல்லவேண்டும். அறிவியல் அறிஞர்களின் சாதனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு முன்னர் எது அறிவியல் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளல் வேண்டும். இதற்கு அறிவியலேப்பற்றி அறிந்துகொள்ளுதல், அறிவியலில் கையாளப் பெறும் முறைகளேத் தெரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைவிட, அறிவியல் மெய்ம்மைகள், அறிவியல் விதிகள் ஆகியவற்றைப்பற்றிய அறிவு மிக முக்கியமானதன்று என்றுகூடச் சொல்லலாம். அறிவியலேப் பற்றி அறிந்துகொள்ளுதல் மக்களின் அன்ருட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடல் வேண்டும் : அ.து. அன்ருடம் மக்கள் மனத்தில் உதிக்கும் எண்ணமாகவும் ஆகிவிடல்வேண்டும். இத்தகைய அறிவு சிறந்த கல்வி முறையால்தான் ஏற்படும் : ஆனல் அறிவியலேப்பற்றி அறிந்துகொள்வதுதான் கல்வியின் கோக்கமாகும் என்ற அளவில் கல்வி அமைந்துவிடுதலும் கூடாது ; அஃது அங் கோக்கத்தில் ஒரு பகுதியாக அமைவதுதான் சிறப்பு, பள்ளிகளில் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகப் படிக்கும் முறையை நீக்கி அறிவியலேப் பொது நோக்காகவும் தனி நோக்காகவும் பயிலும் முறையை மேற்கொள்ளுதல் வேண்டும். -