பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அறிவியல் பயிற்றும் முறை - رہی۔یہمہم۔م۔مبہم محصحصہ صحمحمحسیم مماس۔ களேயும் வினியோகித்தல்பற்றிய விவரங்கள், பிராணிகளின் தொகை கூடுவதற்கும் குறைவதற்குமுள்ள காரணங்கள், கொள்ளே நோய்கள், தாவரங்களைப் பாதிக்கும் பீடைகள், களைகள், புல்லுருவிகள், பிறநோய்கள்பற்றிய விவரங்கள் முதலியவற்றை அறியலாம். பிராணிகள் தாவரங்கள்பற்றிய சூழ்நிலைக் கலை இருசாராருக்கும் வேண்டப்படுவது. - வரலாறு : ஒரு காட்டின் முன்னேற்றமும் நாகரிகமும் அந்நாட்டில் அறிவியல் கலேயின் வளர்ச்சியைப் பொருத்தது ; அறிவியல் மெய்ம்மைகள் தொழில் நுணுக்கக் கலையில் பயன்படுங்கால் நாட்டின் பொருளாதார கிலே உயரும் ; பொருளாதார நிலையால் பிற வசதிகளும் பெருகும். அரசியல், வாணிகம், கைத்தொழில், உற்பத்தி முறைகள், உணவு, வாழ்க்கைத்தரம் முதலியவை அனைத்தும் அறிவியல் தொழில் துறையில் பயன்படும்பொழுதுதான் உயரும் என்பதை அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான், சீனு முதலிய காட்டின் வரலாறுகளிலிருந்து அறியலாம். வாழ்க்கையில் அறிவியல் பயன்பட்டதால்தான் போக்குவரவு சாதனங்கள் வியத்தகு முறையில் அமைந்தன : மருத்துவத் துறை நல்ல முறையில் வளர்ச்சி பெற்றது. மலேரியா போன்ற நோய் பரவுவதன் காரணத்தை அறிந்ததனுல்தான் உலகில் மனிதர் வாழ்வதற்குச் சிறிதும் வசதியில்லாத இடங்களிலும் உயர்ந்த முறை யில் வசிப்பதற்கு வசதிகளே அமைத்துக்கொள்ள முடிந்தன. உலகில் கொடைக்கானல், உதகமண்டலம், டார்ஜீலிங், நைனிடால் போன்ற இடங்கள் உயர்ந்த முறையில் கோடை கிலேயங்களாக அமைந்ததற்கு அறிவியல் வளர்ச்சியே காரணம் என்பதை எவரும் எளிதில் அறியக் கூடிய தொன்று. வரலாற்று ஆசிரியர்கள் இத்தகைய சில மெய்ம்மைகளே அறிந்துகொண்டால் அவர்கள் தம் பாடத்தைச் சிறந்த முறையில் கற்பிக்கலாம் அறிவியல் ஆசிரியர்களும் பல்வேறு நாடுகளின் நாகரிக வளர்ச்சியையும் பிறவற்றையும் அறிந்துகொண்டால் தங்கள் பாடத்தைச் சுவையுடன் பயிற்றுவிக்க இயலும். அறிவியல் மெய்ம்மைகள் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்துகின்றன என்பதை மாளுக்கர்கள் அறியச் செய்யலாம். பேசும் படங்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் மக்கள் ஒய்வு நேரத்தைக் கலேயுணர்வுடன் கழிப்பதற்குப் பயன்படுவதை அறிந்து கொண்டால் வரலாற்றுப் பாடமும் சிறக்கும் அறிவியல் பாடமும் சுவைக்கும். இரண்டு பாடத்திட்டங்களிலும் இத்தகைய பகுதிகளே எவ்வாறு இணைத்துக் கற்பிக்கலாம் என்பதை இரண்டு பாட ஆசிரியர்களும் கலந்து தீர்மானித்தல் வேண்டும். ஓவியம் : கண்களிப்பப் படமெழுதிக் காட்டும் என்றன் கை’ என்று கைத்திறனேச் சிறப்பித்தார் கவிமணி. ஒவியம் எல்லாப் பாடங்களுடன் இணேந்து செல்லக்கூடியது. சிறு வயதிலிருந்தே