பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலும் பிற பாடங்களும் 177 ASA SSASASMAMMMMMAAASAASAASAASAASAASAASAAMAMMMMM குழந்தைகள் ஒவியம் வரைதலில் ஆர்வங் காட்டுவார்களாதலின், அதை எல்லாப் பாட ஆசிரியர்களும் பயனுள்ள வழிகளில் திருப்பிக் கொள்ளலாம். ஒரு குழந்தை ஒரு பொருளைப்பற்றிக் கற்கும்பொழுது தான் பார்த்தவற்றை ஒவியமாக வரைவதில் மகிழ்ச்சி கொள்கின்றது. காட்டுமிராண்டியும் அப்படித்தான் தான் கண்டவற்றை ஒவியமாகத் திட்டுவதில் களிப்படைகின்ருன். கவர்ச்சியை உண்டாக்கிவிட்டால் குழந்தை ஒவியம் தீட்டுவதில் உற்சாகம் காட்டும். இயற்கைப் பாடம், பெளதிகம், வேதியியல் போன்ற துறைகளில் ஒவியத்திற்குச் சிறந்த இடம் உண்டு. சிறுவர்களும் சிறுமிகளும் தாம் பார்த்த பிராணிகள், தாவரங்கள் முதலியவற்றை வரைவதில் விருப்பம் காட்டுவர். நன்ருக வரையப்பெறும் ஒவியங்களில் வண்ணந்திட்டும் பழக்கத்தையும் உண்டாக்கலாம். பெளதிக வேதியியற் பகுதிகளில் சில ஆய்கருவிகள், துணேக்கருவிகள் சோதனே கிலேயில் அமைக்கப் பெற்ற சாதனங்கள் முதவியவற்றை அழகான கோட்டுப் படங்களால் வரையும் பயிற்சிகளேத் தரலாம். பொறியியல் துறையில் ஒவியத் திறமை பெரிதும் பயன்படும். - - கைத்தொழில் : கைத்தொழிலேயும் அறிவியலுடன் பொருத்திக் கற்பிக்கலாம். பள்ளியிலுள்ள கைத்தொழில் ஆசிரியரும் அறிவியல் ஆசிரியரும் யோசித்துத் திட்டம் வகுத்தால் சில அறிவியல் பகுதிகளுக்கு வேண்டிய பொருள்களே மாளுக்கர்களைக்கொண்டே செய்விக்கலாம். மானுக்கர்கள் கைத்தொழில் வல்லுநர்களாக இராவிட்டாலும், சிற்சில விஷயங்களில் அவர்களின் கைத்தொழில் அறிவை அறிவியல் துறையில் கொண்டுசெலுத்தலாம். அறிவியல் ஆய்வகங்களில் பயன்படும் மரப்பெட்டிகள், கண்ணுடி வில்லைத் தாங்கிகள், மின்விளக்குப் பிடிகள், சோதனைக்குழாய்த் தாங்கிகள், ஒளிமானிக்குப் பயன்படும் திரைகள், மின்முறிகலத் தாங்கிகள் முதலியவற்றைக் கைத்தொழில் கிலேயத்திலிருந்து செய்தனுப்பலாம். அவற்றைச் செய்யும் திறன் எய்தாவிடினும், செய்யும் முறையையும் அத்திறனின் இன்றியமையாமையும் அறிவர். இத்தகைய மரச்சாமான் களுக்கு மினுக்கெண்ணெய் பூசி மெருகேற்றும் முறைகளே மாளுக்கர் கள் நன்கு கற்றுக்கொள்ளலாம். துருப்பிடித்த சில கருவிகளுக்கு முலாம் பூசும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்; காது, கண், இதயம், ஈரல் முதலியவற்றின் பொம்மைகளைச் செய்யலாம். இத்தகைய பொம்மைகளால் ஏற்படும் கல்விப் பயன்களைத் தவிர கட்டுக்கம் நல்ல முறையில் செயற்பட்டு மானக்கர்கட்கு மனநிறைவின கல்குகின்றது. தவிர, அந்த உறுப்புப் பொம்மைகளே ஆக்கும்பொழுது அந்தப் பொம்மைகளின்மூலம் அவ்வுறுப்புகள்பற்றிய எண்ணங்கள் யாவும் வெளிப்படுமன்ருே கைகளால் வேலை செய்யும்பொழுது மூளை அ. ப. மு-12