பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் r 183 SAMSMMMAMSSSMSSSMSSSMSSJAMAAASAASAASAAMMSMSASAASAAASAAAA முறைகளேயும், கையாளும் வழி வகைகளையும் முறை வல்லார் கணித்துள்ளனர். அவற்றை அளவியல் நூல்களில் கண்டு கொள்க. இன்று வெளியார் நடத்தும் தேர்வுகளின் முடிவுகளைக்கொண்டு தலைமையாசிரியர்கள், கல்விக் குழுக்கள், கல்வித் துறையினர் ஆகியோர் பல்வேறு பள்ளிகளின் வேலேயின் தரத்தையும், ஒரே பள்ளியில் பல ஆசிரியர்களின் வேலையின் தரத்தையும். ஒப்பிட்டுப் பார்க்க முனைகின்றனர். பள்ளிகளில் மேற்கொள்ளப்பெறும் பல அரும் பணிகளே இம்முறையில் அளத்தல் இயலாது என்பதை அவர்கள் உணராதது மிகவும் வருந்தத் தக்க செய்தியாகும். அறிவியலில் எவற்றை அளப்பது ?: அறிவியலேக் கற்பிப்பதால் மாளுக்கர்கள் (1) அறிவியலில் காணும் மெய்ம்மைகளே வாழ்க்கை அநுபவங்களில் பயன்படுத்தும் திறன்களை அடைகின்றனர் : (2) தாம் வாழும் சூழ்நிலையில் காணும் இயற்கை நிகழ்ச்சிகளின் தன்மைகளே கன்கு அறிகின்றனர் ; (3) அறிவியல் கற்றலில் கண்ட முறைகளைச் சுவைப்பதிலும் அவற்றைப் பிற துறைகளில் கையாள்வதிலும் திறன்களே எய்துகின்றனர் என்று முன்னர்க் கண்டோம். பள்ளிகளிலுள்ள பாடத்திட்டங்கள் மானுக்கர்கட்குப் பிராணிகள், தாவரங்கள், பெளதிகப் பொருள்கள், சில இயற்கை நிகழ்ச்சிகள் முதலிய செய்திகளை அறிவிக்கும் நோக்கத்தையே கொண்டுள்ளன. இவற்றைக் கற்பதால் மானுக்கர் பெறும் கவர்ச்சிகள், மனப்பான்மை கள், சுவையறி பண்புகள், திறன்கள், பழக்கங்கள், குறிக்கோள்கள், செயல் முறைகள் முதலியவை எவை என்பதைத் திட்டமாக வரையறைப்படுத்த முடியவில்லை. எ ன் ரு லு ம், அறிவியலேக் கற்பதால் மாளுக்கர் பெறும் பயன்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் : இந்த நான்கு வகையான பயன்களையும் மாளுக்கர்கள் அடைந்துள்ளனரா என்பதைச் சோதனைகளால் தேறவேண்டும். 1. செய்திகள் : பெரும்பாலான சோதனைகள் இவற்றிற்கு முதலிடம் தருகின்றன. கற்றல் இவற்றை பறிதலே என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பல செய்திகளே அறிவதால் ஏற்படும் மனநிறைவின் காரணமாக அதுவே அறிவாகவும் கருதப்பெறுகின்றது. எண்ணிப் பார்த்தால் இது தவறு என்பது தெரிய வரும். ஒன்றைப் பற்றி அறிந்து கொண்டால் மட்டிலும் போதாது : அறிதல் மட்டிலும் அறிவு ஆகாது. பல செய்திகளே அறிதல் அவை வாழ்க்கையில் பயன்படும் அளவுக்கு அறிவாகக் கருதப்படலாம். அந்த அளவு மாளுக்கர்கள் செய்திகளை அறிதல் இன்றியமையாதது. எனவே, தேர்வுகள் அவற்றை அளத்தல் வேண்டும். 2. உறவு முறைகள் அறிவியலில் செய்திகள்தாம் சிந்தனைக்குத் துணையாக இருப்பவை. செய்திகளிடையேயுள்ள உறவு முைறகளை