பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பள்ளிகளில் அறிவியல் 5 அறிவியல் படிப்பு பள்ளியில் சிறந்த முறையில் அமைந்தால் சிறுபாலார் அடிப்படையான பயிற்சியைப் பெற்று அறிவியல் பிரிவுகளில் சிறப்பான ஆராய்ச்சி நடத்தவும், பெரும்பாலோர் அறிவியலேப்பற்றித் தெளிவாக அறிந்து அது சமூக வாழ்விலும் பொருளாதாரத் துறையிலும் பயன்படும் முறையை உணரவும் கூடும் என்று கருதலாம். சில புதிய போக்குகள் : சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளாகப் பள்ளிகளில் அறிவியல் பயிற்றப்பெற்று வருகின்றது. அ.து. இயற்கை மெய்ப்பொருளியலாகத் தொடங்கியது; கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகட்கு முன்னர்தான் அது சிறப்பாக மெய்ம்மையும் வருண&னயும் நிறைந்த அறிவியல் சார்ந்த அறிவின் தொகுதியாக அமைந்தது. கடந்த ஒரு சில ஆண்டுகளாகப் பல நாடுகளின் அறிவியல் பாடத்திட்டங்கள் ஆராய்ச்சி கிலேயில் இருந்து வருகின்றன. இந்த நூற்ருண்டில் அறிவியல் அறிவின் விரைவான முன்னேற்றம் பல புதிய கருத்துக்களையும் (Concepts), கருத்துக்களின் ஒரு புதிய ஒருமைப்பாட்டினேயும் கொண்டுவந்துள்ளது. அறிவியலின் வகை முறையும் அதன் பொருளும் மாறிவிட்டன : தனியாகச் செய்யப்பெற்ற ஆராய்ச்சியின் இடம் குழு ஆராய்ச்சியால் ஈடுசெய்யப்பெற்றுள்ளது. புதிய நுட்ப முறைகள் (Techniques) தோன்றியுள்ளன; பயன்படும் ஆப் கருவியும் மிக அதிகமாக விரிந்த கிலேயில் அமைந்துள்ளது. பள்ளியில் பயிற்றப்பெறும் அறிவியல் அன்ருட வாழ்வினின்றும் பிரிந்து பத்தாம் பசலி'யாகிவிட்டது. பல ஆசிரியர்கள் ஒரு தலே. முறைக்கு முன்னிருந்த அறிவியலைப் பயிற்றலும் போதாது என்று உணரத் தொடங்கிவிட்டனர். ஆனால், அந்த அறிவியல் பகுதி நவீன காலத்திற்கு மிகப் பொருத்தமாகவுள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப் பெறுதல் வேண்டும். இந்தப் போக்கில் சிறப்பாகப் புதிது ஒன்றும் இல்லே. அண்மையிலோ அடுத்தோ சமூகத்தின் திறன்களும் அருஞ் செயல்களும் பள்ளிக்குரிய கல்வி ஏற்பாட்டில் பிரதிபலிக்கத்தான் செய்யும். அறிவியல், கணித இயல், அவற்றுடன் இணந்துள்ள தொழில் நுண்ணியல் ஆகிய துறைகளில் நேரிட்டுள்ள பெரிய முன்னேற்றங்கள் கல்விபற்றிய கொள்கை, அதன் நடைமுறை இவற்றின் முன்னேற்றத்தையும் விஞ்சிவிட்டன. இதன் காரணமாகவே, பல நாடுகள் தம்முடைய கல்வி ஏற்பாடுகளேத் திரும்பச் சிந்தித்து வருகின்றன. அறிவியல்களிலேயே பெளதிக இயல் மிக முன்னேற்றம் அடைந்திருப்பதாலும் அது மானிட வாழ்வில் பெரு விளைவுகளே ஏற்படுத்தியிருப்பதாலும், இந்தப் பாடமே முதலாவதாக ஆராய்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால் எய்தின முடிவுகள் ஏனய அறிவியல் பாடங்கட்கும் சமமாகப் பொருந்து கின்றன. இந்தப் பாடத்தில் சில முற்றுப்பெற்ற பாடத் திட்டங்களும்