பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் 185. கண்டறிந்த பேருண்மையாகும். மானக்கர்களைப் பல்வேறு செய்திகளே நினேவு கூரச் செய்வதற்கு இவற்றைப்போல் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை என்று துணிந்து கூறலாம். சிறந்த வினக்களின் மூலமாகத்தான் சமயப் பெரியார்கள் யாவரும் நுட்பமான கருத்துக்களையும் தெளிவாக விளக்கியுள்ளனர். கிப்ளிங் என்ற கவிஞர் வினுக்களின் பயனேக்குறித்து இவ்வாறு கூறுகின்ருர் : - அன்பால் என்பாற் பணிபுரிவோர் அறுவர் உளர்.என் னிடத்தமைந்த இன்பார் அறிவுச் செல்வமெலாம் இவர்தத் தனவே அவர்பெயர்கள் மின்போல் தோன்றும் ஏன்? எங்கன்? எப்பொழு(து) எங்கே? யார்?என்ன ? என்போர் : இவர்கள் நெறிதவரு திசைந்த பண்பா டுடையவரால், நன்னூ லாசிரியரும் அறுவகை விளுக்களைக் குறித்து, அறிவுஅறியாமை ஐயுறல் கொளல்கொடை ஏவல் தரும்வின ஆறும் இழுக்கார்.” என்று கூறியிருப்பது ஈண்டுச் சிந்திக்கற்பாலது. பட்டறிவு மிக்க ஆசிரியர்களும் வினுக்களேக் கையாள்தல் எளிதன்று, விளுக்களேத் திறனுடன் கையாள்பவரே சிறந்த ஆசிரியராவார். - விளுக்களின் பயன் : வகுப்பறையில் கற்பித்தலில் வாய்மொழி வினுக்களால் நான்கு நோக்கங்கள் நிறைவேறுகின்றன. முதலாவது : மாணுக்கர்களின் அடிப்படை அறிவை அறிந்துகொள்வதற்குப் பயன் படுகின்றன. அடிப்படை அறிவை ஆசிரியர் நன்கு அறிந்தால்தான் அ.துடன் எளிதாக இணையவல்ல புதிய செய்திகளைக் கற்பிக்க இயலும். இரண்டாவது : வினுக்களால், மாளுக்கர்களின் திரிபுணர்வுகளையும், புரிந்து கொள்வதில் அவர்கட்கு நேரும் இடர்ப்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம் : அவர்களின் மனம் புதிய பகுதிகளைக் கற்பதில் நன்முறையில் ஈடுபடுகின்றதா என்று அறிந்துகொள்ளவும் வினுக்கள் பயன்படுகின்றன. மூ ன் ரு வ து: பாடவளர்ச்சியின்பொழுது மாளுக்கர்கள் மனத்தைக் கவனத்தில் ஈர்க்கவும், கற்பித்தலில் அவர் கள் ஒத்துழைப்பைப் பெறவும் வினுக்கள் பெரிதும் பயன்படுகின்றன. காரண காரியத் தொடர்புள்ள அறிவியல் பாடங்களில் அவற்றின் பயன் i I Keep six honest serving men ; They taught me all I know Their names are What and Why and When And How and Where and Who. - —Kipling 2 நன்னூல்-நூற்பா.-885