பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 அறிவியல் பயிற்றும் முறை. AMMMMAMMMAMMAAASAAAS உண்டு. இக்குறைகளே நீக்க ஒருசில திட்டங்களே மேற்கொண்டாலும் குறைகள் யாவும் நீங்கிவிடும் என்று சொல்வதற்கில்லே. மூன்று : கட்டுரைமுறைச் சோதனைகளில் வேறு பல சிறு குறை: களும் உள்ளன. நிறைமதி மாளுக்கன் எழுதும் குறையுள்ள விடைக்கு அதிக மதிப்பெண்ணும் குறைமதி மாளுக்கன் எழுதும் கிறையுள்ள விடைக்குக் குறைந்த மதிப்பெண்ணும் தருவதைத் தவிர்க்கமுடிவதில்லே. விடைத்தாள்களுக்கு உரியோரை அறியுங்கால் இங்கிலே ஏற்படுகின்றது. கையெழுத்து, மொழிநடை, எழுத்து இலக்கணப் பிழைகள் ஆகிய வற்ருல் மதிப்பெண்கள் குறைவதும் உண்டு. ஒருசிலர் இவற்றிற்காகக் குறைக்கின்றனர் ; வேறு சிலர் இவற்றைக் கவனிப்பதே இல்லே. ஒரே தேர்வாளர் ஒருநாளில் இவற்றைக் கவனித்தலும் பிறிதொரு, நாள் கவனியாது இருத்தலும் உண்டு. மாளுக்கரின் நடத்தை என்று: ஆசிரியர் கருதுவதற் கேற்றவாறு மதிப்பெண் மாறுபடவும் கூடும். இவைபோன்ற பிற குறைகளே பாலார்டு, கிரீன் - ஜார்ஜென்ஸன், லின்குஸ்டு போன்ற அறிஞர்கள் எழுதியுள்ள அளவை நூல்களில் கண்டு கொள்க. - ஒருசில நிறைகளையும் ஈண்டுக் காட்டுவோம். (1) வினுக்களே ஆயத்தம் செய்வதும் அவற்றை மானுக்கர் களுக்கு அளிப்பதும் எளிது. ஆயத்தம் செய்வதற்கு அதிகக் காலம் தேவையில்லே. அவற்றிற்கு விடை எழுதும் முறைகளையும் மாணுக்கர் கட்கு விளக்குதல் எளிது. - (2) எல்லாப் பாடங்களுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம். தகவல்களே மட்டிலும் அறிவதற்கு இம்முறை வினுக்கள் பெரிதும் பயன்படும். (3) செய்திகளைக் காரண காரிய முறையில் அமைக்கும் சிறந்த, மனப் பயிற்சியை அளிப்பதற்கும், அவற்றை வகைப்படுத்தி எடுத்து இயம்புவதற்கும், மொழிநடையை வளர்ப்பதற்கும் இம்முறை. வினுக்கள் நல்ல வாய்ப்புகளே நல்குகின்றன. பல ஆண்டுகளாக கட்டுரைச் சோதனைகளேக் குறை கூறினாலும், அவற்றை இன்னும் அடியோடு நீக்கமுடியவில்லை. இம்முறைத் தேர்வு. க்ளிலுள்ள குறைகளே நீக்குவதில் முறைவல்லார் முனைந்துள்ளர். அவற்றின் விவரங்களே அறிஞர்கள் எழுதியுள்ள அளவை நூல்களில் கண்டு கொள்க." - எழுத்து (புது) முறைச் சோதனைகள் : கட்டுரை முறைச் சோதனை களிலுள்ள குறைகளை நீக்குவதற்காகவே புதுமுறைச் சோதனைகள் கையாளப்பெறுகின்றன. இவற்றில் மாளுக்கர்கட்கு எழுதும் வேலை. அதிகம் இல்லை : ஒரு சில சொற்கள், சொற்ருெடர்களைக் கொண்டே 1. Greene and Jorgenson : Measurement and Evaluation in: Secondary School pp. 143—149.