பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலில் அளவியல் $33 ۔۔۔--N-م۔ --مہوں-میت- مہی۔ வினுக்களுக்கு விடையிறுத்து விடலாம் ; சில விளுக்களுக்குக் கூட்டல் குறி, கழித்தல் குறி போன்ற குறியீடுகளாலேயே விடை அளித்து விடலாம் : அடியிற் கோடிட்டுக் காட்டியே சிலவற்றிற்குச் சரியான விடையை அளித்துவிட முடியும். புதிய முறைத் தேர்வுகளால் ஏற்படும் நிறைகளே முதலில் காண்போம். நிறைகள் : (1) எல்லாப் பகுதிகளின் அறிவையும் தேற முடிகின்றது ; அதிகமான வினுக்களேக்கொண்டு மி கு தி ய | ன பொருளறிவை அளந்து விடலாம். 2 (2) வினுக்களுக்குரிய விடைகள் மிகவும் சுருக்கமாக இருப்பதால் திருத்துவது எளிது ; விரைவாகவும் திருத்திவிடலாம். உயிரற்ற பொறிகளும் இவற்றைத் திருத்திவிடக் கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடை இராததால், சினம், மகிழ்ச்சி முதலிய உளச் சுவை களின் மேலீட்டாலும் விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளாலும் விடைத் தாள்களே மதிப்பிடுவதில் மதிப்பெண்கள் வேறுபடக் காரணமில்லே. (3) பொருளறிவு மட்டுமன்றிக் கால உணர்ச்சி, காரண காரியத் தொடர்பு, தீர்மானிக்கும் ஆற்றல் முதலிய திறன்கள் யாவும் மதிப்பிடப்பெறுகின்றன. குறுகிய காலத்தில் அதிகப் பாட எல்லேகள் சோதிக்கப்பெறுவதால், குருட்டுப் பாட அறிவிற்கு இங்கு இடம் இல்லே. - (4) மாளுக்கர்களின் விடைகள் திட்டமாக அமைய வேண்டி யிருப்பதால் விருப்பப்படியெல்லாம் கயிறு விடுவதற்கு இங்கு இடமில்லே. (5) இம்முறைச் சோதனைகள் ஒருநிலையாக்கப்பெற்ருல், பல பள்ளிகளின் வேலையை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆசிரியர்களும் திறனாய்வாளர்களும் புதிய முறைச் சோதனைகளில் பல குறைகளைக் காட்டுகின்றனர். அவற்றையெல்லாம் தொகுத் துரைத்தல் எளிதன்று. முக்கியமான ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டுக் கூறுவோம். குறைகள் : (1) கருத்துகளைக் காரண காரிய முறையில் எடுத்துக் கூறுவதற்கும், பொருள்களின் வரையறவுகளேக் கூறித் தெளிவுபடுத்தி விளக்கிக் காட்டுவதற்கும், தொகுத்தல், வகுத்தல், விரித்தல், சுருக்கல் முதலியவற்றில் மானுக்கர்கள் அடைந்திருக்கும் தகுதியின் அளவை வெளிப்படுத்துவதற்கும் இதில் வாய்ப்பு இல்லை. சிறந்த மொழி நடைப்பயிற்சிக்கு இங்கு இடமே இல்லை. (2) வெறும் பொருளறிவுக்கு அதிக மதிப்பினே கல்குகின்றது. சிந்திக்கும் ஆற்றலே உண்டு பண்ணவும், வளர்க்கவும் இதில் இடம் இல்லை.