பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 SÚ அறிவியல் பயிற்றும் முறை (3) உத்தேசமாக விடையளிப்பதற்கு அதிக வாய்ப்புக்களுள்ளன என்றும், இதல்ை இம்முறை விளுக்களால் தேறுவது சரியானதல்ல வென்றும் கூறுகின்றனர். (4) இம்முறை விளுக்களே ஆயத்தம் செய்வது எளிதன்று : பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் மட்டுமே இவற்றை நல்ல முறையில் ஆயத்தம் செய்யலாம், - - (5) இவற்றை அச்சிடுவதில் அதிக பொருட் செலவு நேரிடு கின்றது. எல்லாப் பள்ளிகளும் அதிக செலவைப் பொறுக்க முடியாது. இவை போன்ற வேறு சில குறைகளும் உள்ளன. அவற்றை யெல்லாம் உரிய அளவை நூல்களில் கண்டு கொள்க. சிந்தித்துப் பார்த்தால் அவை யாவும் எளிதில் களையக் கூடியவை என்றும், பெரும்பான்மையானவை கையாள்பவர்களால் நேரிடும் குறைகளே பன்றி முறையின் குறைகளல்லவென்றும் அறியலாம்." முடிவு : பழைய முறைச் சோதனைகள் சிறந்தனவா? அன்றி புதுமுறைச் சோதனைகளா? என்று வினவுகின்றனர். இ.து ஒரு தச்சன நெருங்கி அவன் கையாளும் கருவிகளில் சிற்றுளி சிறந்ததா? அன்றி கொட்டாப்புளியா? என்று வினவுவது போலுள்ளது. இதற்குச் சரியான விடை கூறுவது கடினம் ; வி ைதெளிவற்றதாக இருப்பதால் விடையும் அப்படித்தான் இருக்கும். இவ்வினுவையே ஒரு குறிப்பிட்ட கிலேயில் ஒரு திட்டமான கூறினேச் சோதிப்பதற்கு இரண்டு முறையில் எது சிறந்தது என்று வினவினால் ஒருவாறு மனநிறைவு கொள்ளும் முறையில் விடை கூறலாம். தச்சு வேல்ேக்கு உளியும் வேண்டும் ; கொட்டாப்புளியும் வேண்டும். அதுபோலவே: தேர்வு வேலையில் இரண்டு முறைச் சோதனைகளும் வேண்டும். அறிவியல் பாடத்தில் செயல்முறைகள், கொள்ண்ககளேப் பயன் படுத்துதல், கணக்குகளேச் செய்தல், விளக்கந் தருதல் போன்ற கூறுகளையும் தேறவேண்டும். புதுமுறைத் தேர்வுகளில் சிறப்பாகக் காணப்பெறும் துரண்டும் கூறினே'க் கட்டுரைச் சோதனைகளில் துழைக்கலாம். எனவே, புதுமுறைச் சோதனைகளும் குறைந்த அளவில் விடையை எழுதவல்ல கட்டுரைச் சோதனைகளும் கலந்த தேர்வுகள் அறிவியல் பாடத்திற்கு மிகவும் ஏற்றவையாக இருக்கும் என்று கூறலாம். புதுமுறைச் சோதனைகள்-சில வகைகள் முறைவல்லார் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வகை புதுமுறைச் சோதனைகளேக் கண்டறிந்துள்ளனர். ஆனால், கடைமுறையில் ஏழு அல்லது எட்டு வதைச் சோதனைகள்தாம் பயன்படுத்தப்பெறுகின்றன. 1. Bossing Progressive Methods of Teaching in Secondary schools. என்ற நூலில் தேர்வுகள்பற்றிய இயலேக் காண்க.