பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 அறிவியல் பயிற்றும் முறை حصہ۔م۔م۔--۔-مہمعہ مساسی مرسیستم சோதனைகளை ஆயத்தம் செய்தல்: சோதனைகள் பாடத்திட்டத்தின் நோக்கங்களையும் பாடப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண் டிருக்கவேண்டும். அறிவியல் பாடத்தில் எவற்றை அளப்பது என்பது பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். சாதாரணமாகப் புதுமுறைச் சோதனைகளைக் கையாளும்பொழுது ஒன்றற்கு மேற்பட்ட சோதனை வகைகளைப் பயன்படுத்துதல் வேண்டும். வகுப்பறையில் ஒரு பாட வே8ளயில் கொடுக்கப்பெறும் சோதனைகளில் இரண்டு அல்லது மூன்று வகைச் சோதனைகளைப் பயன்படுத்தலாம் ; நீண்ட நேரத் தேர்வுகளுக்கு நான்கு அல்லது ஐந்து சோதனைகளேக் கையாளுதல் வேண்டும். பாடப் பொருள்களுக்கு ஏற்றவாறு இவ்வகைச் சோதனைகள் மாறும். பாடப் பொருளே எவ்வகை சோதனைகளைக் கையாளவேண்டும் என்பதை ஒரளவு அறுதியிடும். பாடப் பகுதிகளுள் பேரெல்லேகளைத் தழுவக் கூடிய இணேப்புச் சோதனைகள் போன்றவற்றை முதலில் ஆயத்தம் செய்துகொண்டு, பிறகுதான் குறைந்த எல்லேகளைத் தழுவக் கூடிய சோதனைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். மாறி மாறி வரும் சோதனைகளே ஆயத்தம் செய்வதற்கு முன்னதாகப் பொறுக்குச் சோதனைகளே ஆயத்தம் செய்தல் நன்று. இதனுல் எளிய கினேவு கூர் சோதனைகளே ஆயத்தம் செய்வதற்கு முன்பதாக எல்லா இணைப்பு, பொறுக்குச் சோதனைகளே ஆயத்தம் செய்துவிடவேண்டும் என்று கருதுதல் தவறு. எளிய நினைவு கூர் சோதனைகளேப் போலவும், சரி-தவறு சோதனைகளேப் போலவும் அன்றி எளிதில் வளைந்து கொடுக்காதனவாகவும் விரிந்த கிலேயில் பொருந்தாதனவாகவுமுள்ள சில தகவல்கள் அல்லது உறவு முறைகளே ஏதாவது ஒரு வகைச் சோதனைகளில் முதலில் அமைத்து விடல்வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட கருத்து பிறிதொரு கருத்துடன் உறவுகொண்டு இணைப்புச் சோதனைகளில் அமைக்கப்பட முடியாவிடில், அல்லது பொறுக்குச் சோதனைகளிலுள்ள மாறுபட்ட விடைகளுடன் சரியான முறையில் பொருத்தப்பட முடியா விடில், அதை எளிய முறையில் அமையும் ஏதாவது ஒரு வகைச் சோதனைகளில் சேர்த்து விடல்வேண்டும். سیمسیح சோதனைகளே ஆயத்தம் செய்வோர் ஒவ்வொரு வகைச் சோதனை களிலுமுள்ள தனித்தனிச் செய்திக்கும் தனித்தனித் தாளைப் பயன் படுத்துதல் வேண்டும். மாறி மாறி வரும் சோதனைகள், பொறுக்குச் சோதனைகள், எளிய கினேவு கூர் சோதனைகள் ஆகியவற்றிற்குத் தனித் தனி கார்டு அல்லது தாளே அமைத்தல்வேண்டும். பத்தி வடிவிலுள்ள நிரப்புச் சோதனைகள், இணேப்புச் சோதனைகள் ஆகியவற்றை ஒவ்வொரு வகைக்கும் ஒரு தாளாக அமைத்து, அவ்வகையிலுள்ள அனேத்தையும் ஒரே தாளில் எழுதுமாறு செய்தல் வேண்டும். அவற்றி லுள்ள தனித்தனிச் செய்திகளைப் பிரித்தால் பொருளில்லே. பிறகு