பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. அறிவியல் பயிற்றுவதன் நோக்கங்கள் இன் று நாம் வாழும் அறிவியல் யுகத்திற்கேற்றவாறு சூழ்நிலையை யொட்டிய கல்வியை அளிக்காவிடில் வாழ்க்கை இனிதாக அமையாது. பிற கலைகளைக் கற்பதால் உண்டாகும் பயன் சாவதானமாக ஏற்படுவது அறிவியற் கலேகளைக் கற்பதனுல் கிட்டும் பயனே உடனே துய்க்க முடிகின்றது . அதல்ை ஏற்படும் நன்மைகள் அன்ருட வாழ்க்கையை யொட்டி அமைந்துவிடுகின்றன. எனவே, அறிவியல் பாடம் பள்ளிக் கல்வி ஏற்பாட்டில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக் கின்றது . ஏனய பாடங்களைவிட அது சிறந்த செல்வாக்கையும் அடைந்துள்ளது. இங்கிலேயில் அறிவியல் பயிற்றும் ஆசிரியர்கள் அப் பாடத்தைப் பயிற்றுவதன் நோக்கங்களை ஒரு சிறிது அறிந்துகொள்ளல் வேண்டும். இனி, அந்நோக்கங்களே ஈண்டுக் காண்போம். - 1. நம்மைச் சூழ்ந்துள்ள புறவுலகைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுதல் : பள்ளிகளில் பயிலும் மாளுக்கர்கள் தாம் வாழும் புற உலகைப்பற்றித் தெளிவான தகவல்களே அறிந்துகொள்ள அறிவியல் வாய்ப்பினே கல்குகின்றது. மாளுக்கர்கள் தாம் வாழும் சூழ்நிலையைப் பற்றியும், இயற்கையன்னேயின் எழில் நலத்தைப்பற்றியும் அறிந்து கொள்ளும்பொழுது பேருவகை அடைவர். இயற்கையை எவ்வாறு மனிதன் தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளுகின்ருன் என்பதைத் தெரிந்துகொள்வதில் அவர்களுக்குப் பெரு விருப்பம் இருக்கும். முல்லே, குறிஞ்சி, மருதம், கெய்தல், பாலே ஆகிய ஐவகை நிலங்கள், அவற்றில் கிடைக்கும் விளைபொருள்கள், நாட்டிலுள்ள ஆறு, குளம், ஏரி போன்ற ர்ே கிலேகள், அருவிகள் (Water-falls) ஆகியவைகளைப்பற்றியும், அவை எவ்வாறு மனித கலத்திற்குப் பயன் படுகின்றன என்பதைப்பற்றியும் அறிந்துகொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவர். ஐவகை நிலங்களிலும் உள்ள தாவரவகைகள், பிராணி வகைகள் ஆகியவை எவ்வாறு மக்கள் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன் படுகின்றன என்பதிலும் அவர்களுக்கு ஆசை இருக்கும். வானத்தைப் பற்றியும் வானிலைகளைப்பற்றியுமுள்ள தகவல்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை நல்குவதுடன் சிங்தைக்கும் சிந்தனேக்கும் பெருவிருந்து அளிக்கும். இவற்றைப்பற்றிய அறிவு ஒவ்வொருவருக்கும் மிகவும்