பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆசான் 205 படிப்பு, பயிற்சி, நல்ல தாய்மொழி யறிவு, உற்சாகம் முதலிய தகுதி கள் பெற்ற ஆசிரியர்களேத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசிரியர்தான் பாடத்திட்டத்தின் அச்சாணி அவரைக் கொண்டுதான் அனைத்தும் இயங்குதல் வேண்டும். இவ்வுண்மையைப் பொறுப்புள்ளவர்கள் உணரும் நாள் எந்நாளோ ? ஆசானின் கல்வியறிவு : இன்று பெரும்பாலும் தொடக்கநிலைப் பள்ளிகளில் மூன்ருவது படிவம் அல்லது எட்டாவது வகுப்புவரை படித்துப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களாலும், இடைகிலேப் பள்ளிகளில் ஆருவது படிவம்வரை பயின்று பயிற்சிபெற்ற ஆசிரியர்களாலும், உயர்நிலப் பள்ளிகளில் பி. ஏ. அல்லது பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றுப் பயிற்சியும் பெற்ற அறிவியல் பட்டதாரிகளாலும் அறிவியல் பயிற்றப்பெற்று வருகின்றது. தொடக்க கிலேயிலும் இடைநிலை யிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் அறிவியல் அறிவு போதாது. தொடக்க கிலேயில் செகண்டரி கிரேடு ஆசிரியர்களுக்குக் குறைந்த கிலேயில் உள்ளவர்கள் கற்பிக்கும் நிலை விரைவில் மாறவேண்டும். இடைநிலைப் பள்ளிகளிலும் பட்டதாரிகளைத் தவிர பிறர் அறிவியல் பாடங்களேக் கற்பித்தல் கூடாது. ஆனால், பயிற்சி பெருதவர்களே எக் காரணத்தை முன்னிட்டும் கற்பிக்க அனுமதித்தல் கூடாது. அன்றியும், சில ஆண்டுகளுக் கொருமுறை நவீன கருத்துகளே யெல்லாம் அறிதற் பொருட்டு குறைந்த கால அளவில் (பள்ளிச் செலவில், சம்பளத்துடன் திரும்பவும் ஒரு பயிற்சி பெற வசதி அளித்தல் மிகவும் இன்றியமையாதது. ஆசானின் கல்வி அறிவு மட்டிலும் சிறந்த ஆசிரியனுக்கும் என்று சொல்வதற்கில்லை. அறிவியல் ஆசிரியர்கள் பல பிரச்சினைகளே உடையவர்கள். அறிவியலில் கிலேக்களம் அமைத்தல், அதனே எங்ங்னம் கற்பிப்பது என்பதை அறிதல், தேவையான துணைக் கருவி களேயும் பிறபொருள்களையும் காணல் ஆகியவை அவர்கட்குத் தேவைப் படுகின்றன என்பது உண்மையே. ஆயினும், அவர்கள்அறிவியலைக் கல்வி ஏற்பாட்டில் சேர்த்திருப்பதன் இன்றியமையாமையை உணர்ந் திருத்தல் வேண்டும்; சிறுவர்கள் எங்ங்ணம் அறிவியலேக் கற்கின்றனர் என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும். சிறந்த அறிவியல் ஆசிரியணுவதற்கு அறிவியல் துறை வல்லுகராக இருத்தல் வேண்டும் என்பதில்லை. (i) அறிவியல் பயிற்றலே நம்பிக்கையாக அணுகுதல், (ii) சிறுவர்கள் விடுக்கும் விளுக்கட்கு விடைகாணும் திட்டத்தை அவர்களாலேயே அமைக்கச்செய்தல், (iii) மாளுக்கர்கள் கற்கும் கிலேக்கேற்ற சில அடிப்படையான பாட நூல்களைப் பயிலுதல், (iv) அந்நூல்களில் கூறப்பெற்றுள்ள எல்லாச் சோதனைகளேயும் செய்து பார்த்தல், (v) அந் நூல்களில் கூறப்பெற்றுள்ள இடங்கட்குச் சிறு தொலைப் பயணங்களே மேற்கொள்ளுதல், (vi) அநுபவம் மிக்க