பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆசான் 207 !...................സTamilBOT (பேச்சு). மொழியறிவு : இன்று தாய்மொழியில் பாடங்கள் கற்பிக்கப் பெறுகின்றன. ஒரு காலத்தில் தாய்மொழியில் பயிற்சியில்லாதவர் களுக்குப் பெரு மதிப்பு இருந்தது ; தாய்மொழி தமக்குத் தெரியாது’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்த காலமும் உண்டு. தாய்மொழி யுணர்ச்சியும், தாய்மொழிப் பயிற்சியும் இல்லாதவர்கள் அறிவியல் பாடத்தைத் திறமையுடன் கற்பிக்க இயலாது; ஆங்கிலம் பயிற்று மொழியாக (Medium) இருந்தபொழுது மானக்கர்களின் ஆங்கில அறிவு பெருகியிருந்ததற்கும் தாய்மொழி பயிற்று மொழியாக வந்த பிறகு அதன் காரணமாகத் தாய்மொழியில் அறிவு பெருகாததற்கும் காரணம் என்ன ? தாய்மொழியல்லாத பிற பாடங்களைப் பயிற்றுவோரிடம் தாய்மொழியுணர்ச்சி இல்லை : தாய் மொழி அறிவும் இல்லை. எனவே, பி. ஏ. வரையில் தமிழைப் பாடமாகக்கொண்டு(பகுதி-இரண்டு)படிக்காதவர்களைத் தாய்மொழியில் கற்பிக்க அனுமதித்தல் கூடாது. பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றவர்களும் பி. ஏ. வரையில் வடமொழி அல்லது இந்திமொழியைப் பாடமாகக் கொண்டு (பகுதி-இரண்டு) படித்தவர்களும் பி. ஏ. தமிழ் அளவு படித்துவர விதி செய்தல் வேண்டும். அந் நிலையளவுள்ள ஒரு தேர்வை ஏற்படுத்துதல்வேண்டும் : அல்லது பி. ஏ. தமிழ்த் தேர்வில் தேர்ச்சிபெற வசதிகள் அளிக்கவேண்டும். தமிழாசிரியர்கள்மட்டிலும் தமிழை வளர்க்க முடியாது. நல்ல மொழிப்பயிற்சியும் மொழி யுணர்வும் உள்ள பிற பாட ஆசிரியர்களும் தமிழை வளர்க்க முதற் காரணமாக இருப்பவர்கள். இன்று தாய்மொழி பள்ளியில் கற்பிக்கப் பெறும் பாடம் என்று மட்டிலும் கொள்ள இடம் இல்லை. வாழ்வே தாய்மொழியாக உள்ளது என்பதை அறிவியல் ஆசிரியர்கள் உணர் தல் வேண்டும். . பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும், ! - என்ற பாரதியாரின் வாக்குப்படி பிற கலேகளேயும் தமிழில் பயின்று தமிழை வளர்க்க வேண்டும் . பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேலே நாட்டில் வளரும் புத்தம் புதிய கலேகளைத் தமிழுக்குக் கொணர்தல் அறிவியல் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். உற்சாகம் : அறிவியல் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய பண்பு களுள் தலைசிறந்தது உற்சாகம். உற்சாகம் இருக்கவேண்டுமானல், தான் மேற்கொண்ட பணியில் நம்பிக்கை வேண்டும். பிழைப்புக்காக மேற்கொண்ட துறையேயாயினும், நம்பிக்கையுடன் பணியாற்றில்ை அது சிறக்கும். தம்மிடம் பயில வந்துள்ள குழந்தைகள் தெய்வ 1. பழையதிட்ட முறையிலிருந்த பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றவர்கள் உயர் நிலப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தல் ஆகாது என்று கல்வித் துறை இயக்கு நரால் செய்யப்பெற்றுள்ள தடை ஈண்டு சிந்திக்கற்பாலது. - 2. பாரதியார்: கவிதைகள்-முரசு 30,