பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


338 அறிவியல் பயிற்றும் முறை உருவங்கள்’ என்ற எண்ணம் வேண்டும் அறிவு பெறுவதற்காகவே தம்மிடம் அவர்கள் வந்துள்ளனர் என்ற சிந்தனே வேண்டும். குழந்தை கள் யாவரும் தம் விருப்பப்படி இயக்க வல்ல வராத்திரிக் கொலுப் பொம்மைகள்’ என்ற தவருண எண்ணம் இருந்தால் அதை அடியோடு அகற்றிவிடல்வேண்டும். ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனே வழிபாடு செய்வதற்குப் பக்தி மிகவும் இன்றியமையாததுபோல, வகுப் பறைக்குச் சென்று கற்பிப்பதற்கு உற்சாகம் மிகவும் இன்றியமை யாதது. எனவே, தக்க ஆயத்தங்களுடன் அறிவியல் ஆசிரியர்கள் பணியாற்றத் தொடங்கவேண்டும். ஆசானின் வேலைத் திட்டங்கள் : தொடக்க, நடு, உயர்நிலை வகுப்பு களுக்கு அரசினரால் வகுக்கப்பெற்றுள்ள பாடத்திட்டத்தை ஆசிரியர் கள் அவற்றிலிருக்கும் வரிசைப்படி கற்பிக்கலாம் என்று கினேத்தல் கூடாது. அவற்றைத் தம் பள்ளிச் சூழ்நிலைக் கேற்றவாறு மாற்றிக் கற்பிக்கவும் நேரிடும். எனவே, அறிவியல் ஆசிரியர்கள் அப் பாடத் திட்டங்களை நன்கு ஆராய்ந்து வகுப்பில் கற்பிக்கவேண்டிய வரிசையில் பாடங்களே அமைத்துக்கொள்ளுதல் வேண்டும். மனநிறைவு கொள்ளும் முறையில் அவற்றை இவ்வாறு அமைத்துக்கொள்வ தென்பது எளிதான செயல் அன்று ; அதுவும் வெளியார் நடத்தும் தேர்வுகளுக்கு மாணுக்கர்களே ஆயத்தம் செய்யும் பொறுப்பிலுள்ள ஆசிரியர்களுக்கு இது மிகவும் சிரமமான செயல் என்றே சொல்லவேண்டும். ஆகவே, ஆசிரியர்கள் பாடத் திட்டங்கள் முழுவதையும் நன்கு படித்து ஆராய்ந்து அவற்றின் பொதுநோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். பின்னர்தான் தாம் கற்பிக்கும் ஒழுங்கில் காரண காரிய முறைப்படி பாடங்களே அமைக்க முனயவேண்டும். அரசினரின் பாடத்திட்டங்களிலுள்ள அனைத்தும் சரியாக அமைந்துவிட்டனவா என்பதைத் தேர்ந்து, விதிகளே வருவித்துக்காட்டல், செயல்முறைத் திட்டம், விதிமுறைத் திட்டம் ஆகியவற்றின் பொருத்தம், நூலில் கற்பனவற்றை வாழ்க்கை யுடன் இணைத்தல் முதலிய கூறுகளைக் குறித்துக் கொள்ளுதல் வேண்டும். - இதற்கு அடுத்தபடியாகச் செய்யவேண்டியது மேலே தயாரித்த திட்டத்தை ஆண்டின் பருவங்களுக்குரியனவாகவும், மாத, வாரத்திற் குரியனவாகவும் வகுத்துக் கொள்ளுதல் ஆகும். சிலர் இவ்வாறு வகுத்துக்கொள்வது தேவையில்லே என்று கருதுகின்றனர் நடை முறையில் அவ்வாறு நடைபெறுவது பெரும்பாலும் இல்லையாதலின் அவ்வமைப்பு தேவையில்லை என்றும் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவது தவறு இதல்ை கன்ன பின்ன என்று மனம் போனவாறு பாடங்களே கடத்திச் செல்லும் கிலே ஏற்படக் கூடும்; இது பெருந்தவறு: விரும்பத் தக்கது மன்று. திட்டமின்றி எந்தச் செயலேயும் மேற் கொள்ளுதல் கேடு பயப்பதுடன் அச்செயலும் செவ்வனே நடை