பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆசான் 209 பெருமலும் போகக்கூடும்; எதிர்பார்க்கும் பலனும் கிட்டாது. நடை முறையில் ஏன் நடைபெற இயலவில்லை என்பதை நன்கு ஆராய்ந்து அவற்றின் காரணங்களே அறிந்து அவற்றிற் கேற்றவாறு திட்டங்களே மாற்றியமைக்க முயலவேண்டுமேயன்றி, திட்டம் வகுப்பதையே கூடாது என்று கூறுதல் தவறு. எதிர்பாராது நேரிடும் தாமதத்திற்கும் திட்டத்தில் இடம் வைத்துக்கொண்டால், அனேத்தும் ஒரளவு சரியாக நடைபெறும். 'இவ்வாறு வாராந்திர பாடத்திட்டங்களே வகுக்கும்பொழுது அடியிற் கண்ட குறிப்புகளைச் சிந்தித்தல் கலம் பயக்கும் : (1) ஒரு வகுப்புக்கு ஒரு வாரத்தில் அறிவியல் கற்பிப்பதற்குக் கிடைக்கும் பாடவேளைகள் : (2) அவ் வாரத்தில் வரும் அரசினரால் ஒப்புக்கொள்ளப் பெற்ற விடுமுறை நாட்கள் : - (3) உள்ளுர்த் தேவையை யொட்டி நேரிடக் கூடிய விடுமுறை நாட்கள் ; (4) வகுப்புத் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகள், வேறு விழாக்கள் போன்றவற்றின் நிமித்தம் கற்பிக்காது போகும் பாடங்களின் எண்ணிக்கை : - பள்ளிப் பாடவேளைப் பட்டியில் ஒரு வகுப்பிற்கு நான்கு பாடவேளைகள் அறிவியற் பாடத்திற்கென ஒதுக்கப்பெற்றிருந்தால், வாரத்திற்கு மூன்று பாடங்கள் வீதம் போட்டுக் கொள்ளலாம் : ஒரு பாடவேளேயை எதிர்பாராது நேரிடும் காரியங்களுக்காக விட்டுவிடலாம். யாதொரு நிகழ்ச்சியும் குறுக்கிடாது போகும் வாரத்தில் இப் பாடவேளையை விட்டுப்போன பாடங்களைக் கற்பித்தல், வகுப்புத் தேர்வுகள் நடத்து தல், திருப்புதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு வகுப்பதற்குத் திட்டமான விதிகள் இல்லே. அதுபவத்திற் கேற்றவாறு இத்திட்டம் கன்ருக அமையும். இத்திட்டத்தை அடுத்த பக்கத்தில் காணப்படும் அமைப்பில் காட்டப்பெற்றுள்ளவாறு தயாரிக்கலாம். செய்து கற்கும் பாடங்களுக்கும் இவ்வாறு ஒரு திட்டத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். வகுப்புப் பாடமும் செய்து கற்கும் பாடமும் கூடியவரை இணைந்து செல்லல்வேண்டும். ஆ. ப. மு-14