பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆசான் 21% ,ാഷ. :്.അബ് நோவதால் யாது பயன்? ஆனால் ஒன்று அறிவியல் ஆசிரியர்கள் சோதனைகளைச் செய்து காட்டலில் தயங்கக்கூடாது. ஆசிரியர் காட்டும் சோதனைகளாலும், மாணுக்கர்கள் தாமாகச் செய்யும் சோதனைகளாலும் கற்கும் பகுதிகளில் தெளிவு எற்படுகின்றது. கற்கும் பகுதிகளில் தெளிவு ஏற்பட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாமன்ருே ? இவ்வாறு கற்பிக்காமல் மனப்பாடம் செய்யும் வெறும் ஏட்டுப் படிப்பு முறையால் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்ருலும் யாது பயன் ? அம் முறை கிலேத்த அறிவினையும் பயவரது. தேர்வு முடிந்ததும் கற்றவை அனேத்தும் மனத்திலிருந்து ஆவியாய்ப் போய்விடும். ஓர் அறிவியல் ஆசிரியர் 45 நிமிடங்கள்கொண்ட பாடவேளைகளில் 25-ஐ மேற்கொண்டு பணி செய்து வருவது இன்றைய நடைமுறை , ஒரு சிலருக்கு இன்னும் சற்று அதிக பாடவேளைகளும் அளிக்கப்பெற் றுள்ளன. பாடவேளைகளேப் பிரித்துக் கொடுப்பதில் திட்டமான கருத்துகள் இருக்கமுடியாது. பெரும்பாலும் இது வகுப்புகளின் அளவு, திருத்தும் வேலை, செய்முறை வேலை முதலிய கூறுகளேப் பொறுத்தது. பாட வேளையைப் பிரித்துக் கொடுப்பதில் பள்ளி வேலே நேரத்திற்குப் பிறகு அறிவியல் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும், சோதனைகளுக்கென அவர் செலவிடும் நேரத்தையும் கருத்தில்கொண்டால், அனைத்தும் கன்ருகச் சீர்படும். இவ்விவரங்கள் அனைத்தும் அறிவியல் ஆசிரியரின் பாடவேளைப் பட்டியில் காணப்பெறல் வேண்டும். பாடக் குறிப்புகள் : அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்புகள் எழுதுவதுபற்றி விரிவாக ஒன்றும் கூறுவதற்கில்லே. பாடக் குறிப் புகள் அவரவருடைய தேவைகளையொட்டி ஆசிரியரால் எழுதப்பெறு பவை. அவை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுத்துக் கூறுதல் இயலாது. ஆல்ை, முதன் முதலாகப் பயிற்றும் துறையில் பணியாற்றுவோரும் பயிற்சி பெறுவோரும் பாடக்குறிப்புகள் எழுது வதைப்பற்றி ஓரளவு அறிந்துகொள்ளத்தான் வேண்டும். அவர் களுக்குப் பயன்படும் பொருட்டு ஒருசில குறிப்புகள் ஈண்டு தரப் பெறுகின்றன. கற்பித்தலே அறிந்துகொள்ளும் தொடக்க கிலேயில் கற்பிக்கும் பொருள்களை விரிவாகச் சிந்தித்துக் கோவையாகக் குறித்து வைத்துக் கொள்ளுதல் பெரும்பயன் விளக்கும். நடைமுறையில் பட்டறிவுக் கேற்றவாறு இவை மாறுபடலாம். முன்னதாகவே கற்பனையில் அமைக்கப்பெற்ற திட்டமாதலின் பயிற்றுங்கால் இவற்றை அப்படியே பின்பற்ற முடியாது போயினும் போகலாம். ஆஞல், முன்னதாகவே சிந்திக்கப்பெற்றதால், ஆசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் கற்பித்தலில் அவருக்கு ஒருவிதத் தெம்பு பிறக்கும் வழி விலகிப் போகவும் கேரிடாது. பெரும்பான்மையான ஆசிரியர்களுக்குப் பாடக் குறிப்பு