பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆசான் 2臀赏 எழுதுவதற்கும் பயன்படுத்த வேண்டும். மூன்று குறிப்பேடுகளுக்கும் மூன்று நிறத்தில் மேலட்டை அமைந்தால் நன்று. பள்ளியிலேயே இத்தகைய குறிப்பேடுகளேத் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு இருந்தால், மிகவும் கன்று. எல்லா குறிப்பேடுகளிலும் வலப்புறப் பக்கத்தில் மட்டிலும் எழுதுவதையும், இடப்புறப் பக்கங்களைப் படங்கள் வரைவதற்கும், கணக்குகள் போடுவதற்கும், ஆசிரியரின் திருத்தங்களுக்கும், பிற மூலங்களிலிருந்து திரட்டும் தகவல்களேக் குறித்தற்கும், பாடங்களைத் திருப்பும்பொழுது அறியும் புதிய செய்தி களே எழுதிக்கொள்ளுதற்கும் பயன்படுத்துதல் வேண்டும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே வற்புறுத்த வேண்டும். தாய் மொழியில் பயிற்றப்பெற்ருலும் மாணுக்கர் குறிப்பேடுகளில் குறிப்பெழுதுவதை அறியார். குறிப்பெடுத்தல் ஒரு தனிக் கலே : அது பழக்கத்தில் கைவரப்பெறுவது ஆசிரியர் இதை முதலில் மாளுக்கருக்கு விளக்கிவிட்டால் அப்பழக்கம் அவர்களிடம் கல்ல முறை யில் படியும். ஆசிரியர் கூறுவதில் முக்கிய பகுதிகளைப் பிரித்து, அவற்றை மட்டிலும் ஒரு தொடர்பான முறையில் குறிப்பேட்டில் குறிப்பது கடினமான செயல். கீழ் வகுப்புகளில் மானுக்கர்கள் ஆசிரியர் கரும்பலகையில் எழுதும் சுருக்கங்களை மட்டிலும் குறித்துக் கொண்டால் போதுமானது : பட விளக்கங்களையும் கோட்டுப் படங் களையும் வரைந்துகொள்ள வேண்டும். மேல் வகுப்புகளில் தாமாக எழுதிக்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்ளலாம். எனினும், இடை இடையே முக்கியமான பகுதிகளில் ஆசிரியர் எழுதிக்காட்டும் கரும் பலகைச் சுருக்கங்களும் இன்றியமையாதவை. ஒரு சில விளுக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல், செய்து காட்டலில் கவனித்த ஒரு சில செய்திகளேத் தொகுத்து எழுதிவரச் செய்தல், அல்லது வினுக்களுக்கு விடைகள் எழுதுதல், பிற இடங்களி லிருந்து தெரிந்து கொள்ளும் செய்திகளை எழுதுதல், நூலகங்களி லுள்ள தகவல் நூல்களில் ஒரு சில செய்திகளைக் காணச் செய்து அவற்றை எழுதுதல் - போன்றவற்றை அறிவியல் ஆசிரியர்கள் தரும் வீட்டு வேலையாகக் கருதலாம். இவற்றை ஆசிரியர்கள் அவ்வப் பொழுது திருத்தித் தந்துவிடுதல் வேண்டும். ஒரு சில குறியீடுகளை மேற்கொண்டு இவ்வேலையைத் திறமையாகவும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும். தாமாகச் செய்யும் சோதனைகளே எழுதும் குறிப்பேட்டில் வலப் புறத்தில் சோதனைகளின் விவரமும் இடப்புறத்தில் படங்கள், சோதனைகளின் எடுகோள்கள் அவைபற்றிய கணக்கீடுகள் முதலிய வையும் இடம் பெறுதல் வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும். சோதனைகளே விவரித்தலில் எளிய, இனிய, தெள்ளிய, தீந்தமிழ் நடை