பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 மாதிரிப் பாடக்குறிப்புகள் பாடக்குறிப்பு-1 வகுப்பு : V பாடம் : தவளையின் வளர்ச்சிப் பருவங்கள். நோக்கம் : () சாதாரணமாக எங்கும் காணப்பெறும் தவளையின் வாழ்க்கையைப்பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி யூட்டுதல் : (ii) தம்மைச் சுற்றியுள்ள பொருள்களைச் சரியான முறையில் உற்று நோக்கச் செய்வதில் பயிற்சி தருதல் , (iii) பிராணிகளிடம் அன்பு டனும் பரிவுடனும் இருப்பதற்கு மாளுக்கர்களைப் பழக்குதல். துணைக்கருவிகள் : ஒரு கண்ணுடித் தொட்டியில் ஒரு வளர்ந்த தவளேயும் பல்வேறு பருவங்களிலுள்ள தவளேக் குஞ்சுகளும் : பாசியின் மீது இடப்பெற்றுள்ள தவளையின் முட்டைகள் முதலியவை. 1, முன்னறிவு : தவளையைப்பற்றி ஒரு சில செய்திகள் ஏற்கெனவே மாளுக்கர்கள் அறிந்திருத்தல் அதை நெருங்கிப் பார்த்த அறிவு : பலுச் சீர்த் தாவரங்களின்மீது வழுவழுப்பான பாசி போல் உள்ள பொருளேப் பார்த்திருத்தல். - - 2. பாட வளர்ச்சி : முதல் நிலை (தொடக்கம்) அடியிற் கண்ட வினுக்களே விடுத்து மாளுக்கர்களின் முன்னறிவினைச் சோதிக்கலாம். - (i) தவளைகள் எங்கு அதிகமாகக் காணப்படுகின்றன : (ii) எக்காலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன ? (iii) பலத்த மழைக்குப் பிறகு ஏரி, குளங்களில் கேட்கப்பெறும் ஒலி எவற்றினுடையது : (iv) தவளையின் உடல் எப்படியுள்ளது :