பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 அறிவியல் பயிற்றும் முறை xحمہیلامیہ ہِ مہ،۷ م.م.م. (w) தவளையின் உடல் உறுப்புகளைக் கூறுக. இரண்டாம் நிலை (தவளையின் வளர்ச்சிப் பருவங்கள்) மழைக்குப் பிறகு, தவளைகளின் ஒலிகளைக் கேட்ட ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிற்கு, ஏரிகளுக்குச் சென்ருல் அங்குள்ள நீர்த் தாவரங்களின்மீது பாசிபோல் வழுவழுப்பாகக் காணப்பெறும் பொருள்தான் தவளையின் முட்டை என்று ஆசிரியர் கூறுதல். தொட்டியிலுள்ள முட்டையை மானக்கர்களுக்குக் காட்டுதல். கருமை யான பொருள்களின் மீது மாளுக்கர் கவனத்தை ஈர்த்தல். அவைதாம் தவளேயின் எண்ணற்ற முட்டைகள் என்று உணர்த்துதல். - ஒவ்வொரு முட்டையினின்றும் இவைபோன்ற (கண்ணுடித் தொட்டியிலுள்ள தலைப்பிரட்டைகளைக் காட்டுதல்) பிராணிகள் உண்டா கின்றன என்று கூறுதல் ; அவற்றின் நிறம், வாலேக் கொண்டு நீந்தும் முறை முதலியவற்றை விகைகளைப் போட்டுக்கொண்டே மானக்கர் கட்கு வலியுறுத்திக் கூறுதல். (ஒரு கண்ணுடி மூக்குக் குவளையிலுள்ள சற்று வளர்ந்த தலைப் பிரட்டையைக் காட்டி) அதன் உடலைக் கவனிக்கச் செய்தல் , தல, உடல், வால் என்ற மூன்று பகுதிகளும் தனித்தனியாக அமைந்திருப் பதை நன்கு கவனிக்கச் செய்தல் ; உடலில் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்ருக செதிள் போன்ற இளஞ்சிவப்பு நிறமுள்ள (Pink) உறுப்புகள் தோன்றியிருப்பதைக் கவனிக்கச் செய்தல் : இவற்றின்மூலம் சுவாசிக் கின்றன என்று கூறுதல். தலைப் பிரட்டையின் மூன்ரும் நிலையைக் காட்டி, சில வினுக்கள் மூலம் செதிள்கள் மறைந்திருத்தலேயும், கண்ணும் வாயும் செவுள் களும் தோன்றியிருத்தலேயும், வாலின் அருகில் பின்னங்கால்கள் இரண்டு தோன்றியிருத்தலேயும் அவர்கட்குக் காட்டுதல் தண்ணிரி லுள்ள இளந் தாவரங்களைத் தின்னுதல் : செவுள்களால் சுவாசித்தல். (தலைப்பிரட்டையின் நான்காம் நிலையைக் காட்டி) வாலின் அடிப் பாகத்தில் இரண்டு முன்னங்கால்கள் வளர்ந்து வருவதையும் வால் குறைந்து கொண்டே வருதலேயும் காட்டுதல் , செவுள்கள் மறைந்து நாசித் துவாரங்கள் ஏற்பட்டிருத்தலேயும் காட்டுதல். இப்பொழுது இது தரையில் வசிப்பதற்கேற்ற வன்மையை அடைதல். (இதை ஆசிரியர் கூறுதல்.) ஒவ்வொரு நிலையையும் படம் வரைந்து காட்டி விளக்குதல் வேண்டும். 3. தொகுத்தறிதல் : முதலிலிருந்து இறுதிவரை தவளேயின் வளர்ச்சியைப்பற்றி எளிய இனிய மொழியில் கூறி விளக்குதல், பிறகு அடியிற் கண்ட கரும்பலகைச் சுருக்கத்தை எழுதி மாளுக்கர்களே எழுதிக் கொள்ளும்படி செய்தல். -