பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 223 (i) கடுகு போன்ற முட்டைகள் கோழை போன்ற ஒரு பொருளால் மூடப் பெற்றிருத்தல் இவை தவளே முட்டைகள் ; நீர்ப்பாசி யின் மீது, கல்லின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும். (ii) (சூரிய வெப்பத்தால்) ஒரு வாரத்தில் சாம்பல் நிறமுள்ள தலைப்பிரட்டைகள் முட்டையிலிருந்து உண்டாதல்; தலையும் வாலும்தான் இருக்கும் : நீர்ப்பாசியைக் கவ்விக்கொண் டிருக்கும். (iii) ஒரு வாரத்தில் அகன்ற வாய் தோன்றுதல் தலையின் இரு புறமும் சிறகு போன்ற சிறிய உறுப்புகள் முளேத்தல் : இவற்ருல் சுவாசித்தல். (iv) ஒரு மாதத்தில் வாலின் அடிப்பாகத்தில் இரண்டு பின்கால்கள் வளர்தல் ; சிறகு போன்ற சுவாச உறுப்புகள் மறைந்து செவுள்கள் தோன்றும் ; இதற்கு மீன் தவளே' என்று பெயர். (v) பின்னர் முன்னங்கால்கள் உண்டாதல் : வால் வரவரக் குறைதல். செவுள்களிருந்த இடத்தில் நாசித் துவாரங்கள் ஏற்பட்டு அவற்ருல் சுவாசித்தல் தரையில் வசிப்பதற் கேற்ற ஆற்றலை அடைதல். (wi) நாளடைவில் வால் மறைந்து, முதிர்ந்த தவளையாதல். குறிப்பு : தவளையின் பல்வேறு கிலேகளைக் காட்டும் படங்களே வரைந்து மாளுக்கர்களே வரைந்து கொள்ளச் செய்தல். பாடக்குறிப்பு-2 வகுப்பு : படிவம்-1 பாடம் : காந்தம்பற்றிய முதற்பாடம். நோக்கம் : காந்தத்தின் வகைகள், குணங்கள், பயன்கள் ஆகியவைபற்றிய செய்திகளைக் கற்பித்தல். துணைக்கருவிகள் : (1) காந்தக் கல் , (ii) இலாடகாந்தம், சட்ட காந்தம் , (iii) இரும்புச் சாவி, இரும்புத்தூள் : (iv) முறுக்கில்லாத பட்டுக் கயிறு (w) வாலேதாங்கி. 1. முன்னறிவு : இலாட காந்தத்தைப்பற்றிச் சிறிது அறிந்திருத்தல் : அ.து இரும்புத் தூள்களே இழுத்துக்கொள்ளும் என்பதையும் அறிந்திருத்தல், (சில விளுக்களைக்கொண்டு இதை அறிதல்.) 2. un - susirữšắ : - முதல் கில (தொடக்கம்) ஒர் இலாடகாந்தத்தை வகுப்பிலுள்ளவர் களுக்குக் காட்டி அடியிற்கானும் வினுக்களே விடுத்தல். (அ) இ.து என்ன ?