பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் பயிற்றுவதன் கோக்கங்கள் 9 கண்டறியவும் நேரிடும். இத்தகைய சந்தர்ப்பங்கள் வேதியியல் துறையிலும், மின்சாரத் துறையிலும் ஏற்படும். இவ்வாறு பலவித மாகத் திரட்டப்படும் தகவல்களேயும் எடுகோள்களையும் கொண்டு விதிவரு முறை, விதிவிளக்கு முறை, உவமான முறை ஆகியவைகளைக் கையாண்டு அனுமானித்தல் நடைபெறும். அனுமானித்தல் காரண காரியத் தொடர்புடன் நடைபெறுதல் வேண்டும். தகவல்களும் எடு கோள்களும் சரியாக இருப்பதுடன் அனுமானித்தலேயும் கருத்துடன் செய்தால்தான் சரியான முடிவுகளைக் காண இயலும். இம் முடிவுகள் புதியனவற்றைக் கண்டறியவல்ல உடன்பாட்டு முடிவுகளாகவும் இருத்தல் கூடும் பழைய கொள்கைகளைத் தவறு என்று எடுத்துக் காட்டவல்ல எதிர்மறை முடிவுகளாக இருக்கவும் கூடும். உறுதிப் பாட்டுடன் சேகரிக்கப்பெற்ற தகவல்களிலிருந்துதான் சரியான தீர்ப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய வாய்ப்புகளால் உண்மை நெறியில் பயிற்சி உண்டாகும். அறிவியலில் கையாளப்பெறும் ஒவ்வொரு சொல்லுக்கும் நேரான பொருள் உண்டு, அறிவியலில் காணும் வாய்பாடுகள் சரியானவையாக இருக்கவேண்டுமாயின் སྩ་ அவற்றை ஆக்கும் அறிஞர்கள் பாரபட்சமின்றி நடந்துகொள்ளல் வேண்டும் ; சொந்த விருப்பு வெறுப்புக்களே விட்டொழித்தல் வேண்டும். அறிவியல் பயில்வதால் ஏற்படும் இத்தகைய பயிற்சியும் பழக்கமும் மாளுக்கரின் பிற்கால வாழ்விலும் நடத்தையிலும் செயலிலும் பிரதிபலிக்கக் கூடும் என்று எண்ணுவதில் தவறு ஒன்றும் இல்லை. 3. அறிவியல் முறையில் பயிற்சியையும் அறிவினையும் நல்குதல் : பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற அறிஞர்கள் அறிவியலேப் பயில் வதால் மாளுக்கர்கள் அறிவியல் முறை'யில் பயிற்சியினயும் அறிவினையும் அடைகின்றனர் என்று கருதுகின்றனர். பள்ளிகளில் பெறும் இப் பயிற்சி பிற்காலத்தில் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க மிகவும் பயன்படும் என்பது அவர்கள் கருத்தாகும். அறிதோறும் அறியாமை கண்டற்ருல் என்ற மனப்பான்மையை நல்குவதற்கு அறிவியல் பாடத்தைப் போல பிற பாடங்கள் துணை செய்ய இயலா. ஐசக் கியூட்டன் என்ற அறிவியல் மேதையின் வரலாறு இதற்கு ஒரு சான்ருகும். அந்த மேதை புகழுடன் திகழ்ந்த காலத்தில், அவர் கண்டுபிடிப்புகளுக்கு உலகம் தலதாழ்த்தி நின்றபொழுது, தன்னக் கடற்கரையில் விளயாடும் சிறுவகை எண்ணி தனது ஒவ்வொரு கண்டு பிடிப்பும் தான் கண்டெடுக்கும் ஒவ்வொரு கூழாங் கல்லேப் போன்றது என்று கூறியதாக அவர் வரலாறு உரைக்கின்றது. மைக்கேல் ஃபாரடே, ஐன்ஸ்டைன் .ே பா ன் ற மேதையரின் 1. குறள் - 1110.