பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் பயிற்றுவதன் நோக்கங்கள் 11 துணேயின்றி காம் வாழும் உலகைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. மனிதக் குடிவழியின் நலத்திற்காக அறிவியல் பெருந்துகின புரிந்து வருகின்றது. நாம் துய்க்கும் ஒவ்வொரு பொருளிலும் அறிவியல் தாண்டவமாடுவதைக் காண்கின்ருேம். ஆ ண் ட வன் இருப்பிடத்தைக் குறித்து இரணியனுக்கும் பிரகலாதனுக்கும் வாக்கு வாதம் கிகழ்ந்தபொழுது மைந்தன் தந்தைக்கு அவன் இருப்பிடத்தைக் குறித்து,

  • சாணிலும் உளன்.ஓர் தன்மை

அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்மா மேருக் குன்றினும் உளன்;இங்கின்ற தூணினும் உளன்;நீ சொன்ன சொல்லினும் உளன்.இத் தன்மை காணுதி ' . - என்று சொன்னதாக இலக்கியங்களில் படிக்கின்ருேம். அதுபோலவே, அறிவு வடிவமான ஆண்டவன் அறிவியல் வடிவமாக அனைத்திலும் இருப்பதை ஊன்றி நோக்குவார்க்கு உடனே புலகுைம். அன்ருட வாழ்க்கையில் எண்ணற்ற துறைகளில் அறிவியல் துணேசெய்கின்றது. தொலேபேசியின் துணேயால் வாணிக உலகம் வியத்தகு முறையில் இயங்குகின்றது. சேய்மையிலிருக்கும் மக்களும் ஒருவரோடொருவர் எளிதாக உரையாடுவதற்கு அது துணைபுரிகின்றது. தந்தியும், கம்பி யில்லாத் தந்தியும் செய்திகளை விரைவாகக் கொண்டு செல்கின்றன. மேடுைகளில் எண்ணற்ற இல்லங்களில் கம்பியில்லாத் தந்தி வசதிகள் அமைக்கப்பெற்றுள்ளன. மின்சாரத்தின் விங்தையால் நம் வீடுகள், தெருக்கள், கடைகள், அங்காடி வீதிகள் ஆகியவற்றில் இரவைப் பகலென்று கூறும் வண்ணம் மின் விளக்குகள் ஒளிசெய்து நிற்கின்றன. மின்சாரத்தால் டிராம் வண்டிகளும் இரயில் வண்டிகளும், இயங்குகின்றன. இன்று பெருங் தொழிற்சாலைகளும், ஆலேகளும் மின்சாரத்தால்தான் இயக்கப்படுகின்றன. மின்சாரம் இன்றேல் நவீன வாழ்வே நடைபெற முடியாது என்றுகூடக் கூறிவிடலாம். உள்ளெரி பொறியைக் கண்டறிந்த பிறகு நவீன போக்குவரவு சாதனங்கள் மலிவாகவும் விரைவாகவும் அமைந்துள்ளன. இன்று தரை வழி யாகவும், கடல் வழியாகவும், ஆகாய மூலமாகவும் மக்கள் பயணம் செய்து வருவதால் சேப்மையிலுள்ள இடங்களும் அண்மை யில் உள்ளனபோல் காட்சியளிக்கின்றன. கிராம.போன்’ என்ற கருவியின் துனேயால் நம்மிடமிருந்து மறைந்து விண்ணுடு புக்க பாடகர் களின் குரல்களையும் கேட்கமுடிகின்றது. குறைந்த செலவில் பேசும் 1. கம்பரா. யுத்த, இரணியன்வதை - 124,